மோடி 'மதிப்பு' உயர்ந்தது.. திருச்சியில் பேசும் இளம் தாமரைக் கூட்டத்திற்கு ரூ. 10 நுழைவுக் கட்டணம்!
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் திருச்சி கூட்டத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 10 நிர்ணயித்துள்ளது பாஜக.
மோடியின் ஹைதராபாத் கூட்டத்திற்கு ரூ. 5 வசூலிக்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக கிண்டலடித்திருந்தது. மோடியின் பிராண்ட் வேல்யூ இவ்வளவுதானா என்றும் கிண்டலடித்திருந்தனர்.
இந்த நிலையில் அவரது தமிழக கூட்டத்திற்கு பத்து ரூபாயாக கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

லோக்சபா தேர்தல் ஆயத்தம்
லோக்சபா தேர்தலை சந்திக்க பாஜக படு வேகமாக தயாராகி வருகிறது. பல்வேறு ஆயத்தப் பணிகளில் அது குதித்துள்ளது.

ஹைதராபாத்தில் மோடி முதல் கூட்டம்
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் முதல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பிரசாரக் குழுத் தலைவரான நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அடுத்து திருச்சியில்
அடுத்து தமிழகத்திற்கு வருகிறார் மோடி. செப்டம்பர் 26ம் தேதி அவர் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தாமரை மாநாடு
இளைஞர்களைக் குறி வைத்து இந்த மாநாடுகள் நடத்தப்படுவதால் திருச்சி கூட்டத்திற்கு இளம் தாமரை மாநாடு எனறு பெயர் வைத்துள்ளது பாஜக.

விறுவிறுப்பான ஏற்பாடுகள்
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக இப்போதே தொடங்கி விட்டது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் 16 குழுக்களையும் அது அதிரடியாக அறிவித்துள்ளது.

எதிர்காலத்தைக் கணிக்க இல.கணேசன்
எதிர்கால கணிப்பு மற்றும் திட்டமிடல் குழு முன்னாள் தலைவர் இல.கணேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைக்கு எச்.ராஜா
தேர்தல் அறிக்கை குழு எச்.ராஜா தலைமையில் இயங்கும்.

வாக்குச் சாவடி குழுவுக்கு மோகன்ராஜுலு
வாக்குசாவடி குழு மோகன் ராஜீலு தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு வானதி
விளம்பர குழுவை வானதி ஸ்ரீனிவாசன் கவனிப்பார்.

தொகுதி மாநாட்டுக் குழு
தொகுதி மாநாட்டு குழுவுக்கு சரவண பெருமாள், நிகழ்ச்சிகள் ஏற்பாட்டுக்கு முருகானந்தம், புதிய வாக்காளர்கள் சந்திப்பு குழுவுக்கு பாலகணபதி, கலை நிகழ்ச்சிகள் குழுவுக்கு செல்வ குமார் தலைமை வகிப்பார்கள்.

அறிவு ஜீவிகள் சந்திப்புக்கும் குழு
அறிவு ஜீவிகள் சந்திப்பு குழுவை சுப்பிரமணி தலைமையிலும், சிறப்பு நிகழ்ச்சிகள் குழு சுப.நாகராஜன் தலைமையிலும், தகவல் தொழில்நுட்ப குழு பாலாஜி தலைமையிலும் இயங்கும்.

மக்கள் கருத்தைக் கேட்க கே.என்.லட்சுமணன்
பொது மக்கள் கருத்து கேட்டறிதல் குழுவுக்கு கே.என்.லெட்சுமணன், பிரசுரங்கள் தயாரிப்புக் குழுவுக்கு ராமலிங்கம், தலைவர்கள் பயணதிட்டம் முருகானந்தம், நிதிக்குழு - சக்கரவர்த்தி, துறைவாரி கூட்டங்கள் - சுரேந்திரன் ஆகியோர் இயங்குவார்கள்.

நுழைவுக் கட்டணம் உயர்வு
ஹைதராபாத் மோடி கூட்டத்திற்கு ரூ. 5 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் அதை இரட்டிப்பாக்கி திருச்சி கூட்டத்திற்கு ரூ. 10 என்று அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications