வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil

ராம் ராய்ப்பூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சிறுமியைக் கற்பழித்தவன் ஒரு கிரிமினல் ஆவான். அந்த நபரின் பெயர் சோனு. சிறுமியிடம் ஏதோ சொல்லி அருகில் உள்ள வயலுக்குக் கூட்டிச் சென்று அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளான் சோனு.
பலாத்காரம் செய்த பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு ஓடிப் போய் விட்டனர். சிறுமியைக் காணாமல் தவித்த குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் தேடியபோது வயலில் சிறுமி வலியுடன்அழுதபடி கிடந்ததைப் பார்த்து மீட்டனர்.
இதையடுத்து சோனு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவனைக் கைது செய்தனர். சோனு மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications