இறக்குமதி செய்யப்பட்ட சோனியாவை இத்தாலிக்கே அனுப்புக: உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil

நாக்பூர் அருகே உள்ள கோவில் நகரமான ராம்தெக்கில் சிவ சேனா கட்சி கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
ராஜ்யசபாவில் எதிர்கட்சியினரை பார்த்து ஆவசேமாக பேசிய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானும், சீனாவும் நம் நாட்டு எல்லையில் ஊடுறுவியபோது கூட ஆவேசப்படவில்லையே. சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தலைவர். அவரை அவரது சொந்த நாடான இத்தாலிக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் இடையூறாக இருப்பதாக எதிர்கட்சியினர் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications