வாசன் கோஷ்டிக்கு 15, ப.சிதம்பரத்துக்கு 8, தங்கபாலுவுக்கு 5, இளங்கோவனுக்கு 3, நராயணசாமிக்கு 1!!

ஆனால், இந்த கோட்டை சிஸ்டத்துக்கு முடிவு கட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம்.
ஒழுங்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ராகுல் காந்தி, சட்டமன்ற- நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட விண்ணப்பிக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு 5 பக்க கொஸ்டீன் பேப்பரைத் தரச் சொல்லியிருக்கிறாராம்.
அதில், போட்டியிட விரும்புவோரின் சுய அறிவு, தொகுதி குறித்த அறிவு, பொது அறிவு ஆகியவற்றை சோதிக்கும் கேள்விகளும், அந்தத் தொகுதியில் காங்கிரசின் பலம், கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள், வென்ற-தோற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த கேள்விகள் அடங்கியிருக்குமாம்.
இந்த பதில்களே வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றுமாம்.
இந்த ஸ்டைலை நவம்பர் மாதம் 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலிலேயே அறிமுகப்படுத்தவுள்ளார் ராகுல் காந்தி. இதே சிஸ்டம் அடுத்தாண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அமலாக்கப்படுமாம்.
சீட்டுக்காக வேட்டிகளையே கிழித்து எறியும் காங்கிரஸ்காரர்களுக்கு, இந்த 5 பக்க பேப்பரை கிழித்து எறிய எவ்வளவு நேரம் ஆகும் மிஸ்டர் ராகுல்ஜி!












Click it and Unblock the Notifications