நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை - இடிதாக்கி பெண் பலி
நெல்லை: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இடிதாக்கியதில் ஒருபெண் பலியானார்.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 20ந் தேதி வரை சாரல்மழை ,கனமழை மாறி..மாறி பெய்து மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் அனைத்து அணைகளையும் நிரம்பச் செய்தது.

இந்நிலையில் கடந்த 10தினங்களாக சாரல் மழையுமில்லை,காற்றுமில்லாத சூழல் நிலவிவந்தது. நேற்று மாலை திடீரென வானம்கறுத்து பயங்கர இடியுடன் கூடிய மழை தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கியது.
இம்மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இரவு 8மணிக்கு மேல் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது.
புளியங்குடியில் வயல் வேலைக்கு சென்று திரும்பிய குமாரத்தம்மாள் என்ற பெண் மின்னல் தாக்கி பலியானார். மழையின் இந்த திடீர் வரவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications