பெண் காவலர்களின் பிரா சைஸை எல்லோருக்கும் இமெயில் செய்த 'ஏ.சி'!
நியூயார்க்: அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர பெண் காவலர்கள் செம தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளனர்.
குண்டு துளைக்காத ஜாக்கெட் தைப்பதற்காக அவர்கள் கொடுத்து வைத்திருந்த பிரா அளவுகளை அந்த ஊர் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் தவறுதலாக ஒட்டுமொத்த காவலர்களுக்கும் இமெயிலில் அனுப்பியதால் வந்த தர்மசங்கடம் இது.
இந்த வேலையைச் செய்த உதவி கமிஷனரின் பெயர் டிவேயன் லவ்.

குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுக்காக
அந்த ஊர் பெண் காவலர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் தைப்பதற்காக அத்தனை பெண் காவலர்களின் உயரம், எடை மற்றும் பிரா அளவு ஆகியவை சேகரித்து ஒரு எக்ஸல் ஷீட்டில் போட்டு வைத்திருந்தனர்.

பெண் காவலர்களின் பிரா அளவுகள்
மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஷீட்டில் ஆண் காவலர்களின் அளவுகள் மற்றும் பெண் காவலர்களின் அளவுகள் இடம் பெற்றிருந்தன.

லவ் பொறுப்பு
இதில் கடைசி ஒரு பக்கத்தில் பெண் காவலர்களின் பிரா அளவு உள்ளிட்டவை இருந்தது. ஜாக்கெட் ரெடியானதும், அதுகுறித்த விவரத்தை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு டிவேயன் லவ்விடம் கொடுத்திருந்தனர்.

பார்க்காமல் அனுப்பி விட்டார்
அவர் இதுதொடர்பாக மெயில் அனுப்பியுள்ளார். அப்போது பெண் காவலர்களின் பிரா அளவு இடம் பெற்றிருந்த பக்கத்தை அவர் பார்க்கத் தவறி விட்டார். இதனால் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரின் விவரம் அடங்கிய எக்ஸல் ஷீட்டை ஒட்டுமொத்த காவலர்களுக்கும் அவர் இமெயிலில் அனுப்பி வைத்து விட்டார்.

தர்மசங்கடத்தில் பெண் போலீஸார்
இதனால் பெண் காவலர்களின் பிரா அளவு குறித்த விவரம் அத்தனை காவலர்களுக்கும் போய்ச் சேர்ந்து விட்டது. இதனால் பெண் காவலர்களுக்கு தர்மசங்கடமாகி விட்டதாம்.

தெரியாமல் செய்து விட்டார்
தான் தெரியாமல்தான் இதைச் செய்து விட்டதாக லவ் விளக்கம் அளித்துள்ளார். இதை டெட்ராய்ட் காவல்துறை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications