பெற்ற மகளின் ஆடையை அவிழ்த்த குடிகார தந்தை… மனம் நொந்து புகார் கொடுத்த சிறுமி!
மும்பை: தனது ஆடைகளை அவிழ்த்தும், கடித்தும் கொடூரமான முறையில் தனது தந்தை பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், இதை தனது தாயார் கண்டிக்கத் தவறி விட்டதாகவும் கூறி புகார் அளித்துள்ளார் ஒரு மும்பை சிறுமி.
இதுதொடர்பாக அவர் போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார். 15 வயதாகும் அந்த சிறுமியின் தந்தை ஒரு குடிகாரர்.அவருக்கு 45 வயதாகிறது.
சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகே குடிபோதையில் சிலருடன் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியின் தந்தையை அடித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற சிறுமி முயலவில்லையாம்.
இதனால் கோபமடைந்த தந்தை தனது மகள் என்றும் பாராமல் அவரது ஆடையை கழற்றி அசிங்கமாக நடந்துள்ளார். மேலும் மகளின் உடலில் கடிக்கவும் செய்துள்ளார். குடிகாரத் தந்தை கடித்ததால் சிறுமியின் உடலில் பல் பதிந்துள்ளதாம். முதுகில் தான் ஆழமாக கடித்துள்ளார் அந்த குடிகார தந்தை இதுகுறித்து தாயாரிடம் அழுதபடி கூறியுள்ளார் அந்த சிறுமி, ஆனால் அவரோ, போகட்டும் விடு என்று சாதாரணமாக கூறி விட்டாராம்.
இதையடுத்து மனம் நொந்து போன சிறுமி, தனது தந்தை மீது போலீஸில் புகார் கொடுத்தார். முலுந்த் போலீஸார் புகாரைப் பெற்று விசாரணை நடத்தி சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறுகையில், வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் எனது தந்தை சிலருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் உதவிக்கு வருவேன் என்று அவர் எதிர்பார்த்தார்.
ஆனால் அவர் எப்போதும் குடித்து விட்டு அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவதால் நான் போகவில்லை. இதனால் அவர் கோபமடைந்தார். நேராக வீட்டுக்கு வந்தவர், என்னை அடிக்க ஆரம்பித்தார்.
எனது தரதரவென இழுத்துச் சென்ற அவர் காலால் மிதித்தார். பின்னர் எனது ஆடையைக் கழற்றி அசிங்கமாக நடந்து கொண்டார். பின்னர் என்னை வெறித்தனமாக கடிக்கவும் செய்தார்.
வீட்டில் அப்போது யாரும் இல்லை. இதனால் நான் எனது தந்தையைஎதிர்த்துப் போராட பயந்து அமைதியாக இருந்தேன். அடுத்த நாள் எனது தாயார் எனது உடலில் ஏற்பட்டிருந்த காயத்தைப் பார்த்து என்னவென்று கேட்டபோது நடந்ததைக் கூறினேன்.
அதைக் கேட்ட அவர், சரி போகட்டும் விடுஎன்று கூறி விட்டார். ஆனால் எனது தந்தையின் செயலால் கொதிப்படைந்த நான் புகார் கொடுக்கத் துணிந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications