ஜி-20 மாநாடு: பிரதமர் மன்மோகன் சிங் நாளை ரஷ்யா பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமையன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்கிறார்.
இந்த பயணத்தின்போது பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்க தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 8வது ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகப் பொருளாதார நிலை, கரன்சி மார்க்கெட்டில் ஏற்பட்டு வரும் சரிவு உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
பிரிக் நாடுகள் எனப்படும் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் தலைவர்களும் இந்த மாநாட்டின்போது சந்திக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

இந்த ஐந்து வளரும் நாடுகளின் தலைவர்களும் தங்களது நாடுகள் ஒருங்கிணைந்து 1000 பில்லியன் டாலர் அளவுக்கு நாணயக் கையிருப்பு நிதியை உருவாக்குவது என்று கடந்த மார்ச் மாதம் டர்பன் நகரில் நடந்த பிரிக் மாநாட்டின்போது முடிவு செய்தது நினைவிருக்கலாம். அஏதுகுறித்து இப்போது அவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எழுந்துள்ள நாணய மதிப்புச் சரிவில் இந்த நாடுகள் அனைத்துமே சிக்கியுள்ளன. இந்தியாவில் ரூபாய் மதிப்பு குறைந்தது போல இந்த நாடுகளிலும் நாணய மதிப்பு சரிந்துள்ளது.
இந்தியா தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications