புதுவையில் 3ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 57 வயது ஆசிரியர் கைது
புதுவை: 3-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 57 வயது ஆசிரியரை புதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை, பாகூர் அருகே உள்ள இருளஞ்சந்தை கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் அரிகிருஷ்ணன் (57). இவர் கடந்த புதனன்று வகுப்பறையில் தனிமையில் இருந்த 3-ம் வகுப்பு மாணாவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிரது.
அவரிடம் இருந்து தப்பித்த மாணவி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அச்சிறுமியின் பெற்றோர், ஆசிரியரின் கீழ்த்தரமான நடவடிக்கை குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள், நீதி வேண்டி திடீரென பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் அரிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆசிரியர் அரிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி பொது மக்கள் வலியுருத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
தலைமறைவான அரிராஜனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கல்வி துறை அலுவலகத்துக்கு பணி இடமாற்றம் கோரி ரகசியமாக விண்ணப்பிக்க வந்த அரிராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications