சரக்கு கையாளுவதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த மாதம் 31ம் தேதி 1லட்சத்து 39ஆயிரத்து ,610 டன் சரக்குகளை ஒரேநாளில் கையாண்டது. இது கடந்த 11.07.2009 அன்று ஒரே நாளில் கையாண்ட 1லட்சத்து, 17ஆயிரத்து, 641டன் சரக்குகளின் அளவை விட அதிகமாகும். இது கடந்த கால குறியீட்டை விட புதிய சாதனையாகும்.
அதிக அளவில் தொழிலக மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு உண்டான கரி இறக்குமதி செய்யப்பட்டதால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 45ஆயிரத்து 691 டி.இ.யூ. சரக்கு பெட்டகங்களை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை படைத்துள்ளது. துறைமுகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற சாதனையை படைக்க உறுதுணையாக இருந்து வரும் அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுகசபை உறுப்பினர்கள், துறைமுக துறை தலைவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், சரக்குப்பெட்டகங்களை கையாளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சாதனையை தொடந்து, மத்திய கப்பல்துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ள 2013-14ம் நிதியாண்டிற்கான குறியீடு 30 மில்லியன் டன் சரக்கையும், 5.04 இலட்சம் டி.இ.யூ. சரக்கு பெட்டகங்களையும் வரும் நாட்களில் கையாண்டு, சாதனை புரிந்திட உறுதுணையாக இருக்கவேண்டுமென்று துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications