8 மாணவிகளுடன் உறவு... சீன ஆசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் தன்னிடம் பயிலும் 8 மாணவிகளிடம் செக்ஸ் உறவு வைத்திருந்ததற்காக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பெயர் வாங். ஹெபெங் கவுண்டியில் உள்ள, வுயாங் மின்ஸு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

அவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுடன் செக்ஸ் வைத்திருப்பதாக புகார் கிளம்பியது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், எட்டு மாணவிகளுடன் வாங் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த மாணவிகளை அவர் வற்புறுத்தி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த மாணவிகள் 3வது கிரேட் படிப்பவர்கள் ஆவர். அதில் ஒரு மாணவி கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் கர்ப்பமானதும்தான் நடந்த அக்கிரமம் வெளிச்சத்திற்கு வந்ததாம்.

இந்தப் பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் இடம் மலைப்பாங்கான பகுதியாகும். இங்கு படிக்கும் மாணவியர் அனைவரும் ஹாஸ்டலில் தங்கித்தான் படிக்கின்றனர். இவர்களின் பெற்றோர் தொலை தூர நகரங்களில் வேலை பார்க்கின்றனராம். எப்போதாவதுதான் வருவார்களாம். இதை சாதகமாக்கிக் கொண்டு தனது காம இச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளார் ஆசிரியர் வாங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+