அடித்து கொடுமைப்படுத்திய கணவனை கொன்று ‘அதை’ வெட்டி வேகவைத்த பெண்
லண்டன்: தன்னை அடித்துத் துன்புறுத்திய கணவர் மீது கோபமடைந்த சீனப் பெண் ஒருவர், தனது கணவரைக் கொடூரமாகக் கொலை செய்தார். அப்படியும் ஆத்திரம் தீராமல் கணவரின் ஆணுறுப்பை வெட்டி அதை பிரஷர் குக்கரில் வேக விட்டு விட்டார்.பின்னர் அப்பெண் போலீஸில் சரணடைந்தார்.
சீனாவின் லூவான் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் அடிக்கடி போதை மருந்து உட்கொண்டு தனது மனைவியை துன்புறுத்துவாராம். கடந்த ஜூன் மாதம் தொடர்ந்து 3 நாட்கள் சித்திரவதை செய்துள்ளார்
இதனால் கோபமடைந்த மனைவி தனது கணவரைக் கொலை செய்தார். பின்னர் கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். அவரது ஆணுறுப்பையும் கோரமாக வெட்டித் தள்ளினார். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார்.
அதன் பிறகு மன உளைச்சல் தாங்க முடியாமல் போலீஸிடம் சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார். கணவரைக் கொன்ற பின்னர் ஏற்பட்ட மன உளைச்சலால் அப்பெண்ணின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து விட்டதாம்.












Click it and Unblock the Notifications