சிரியா மீதான போருக்கு ரஷ்யா எதிர்ப்பு: தங்கம் விலை குறைய வாய்ப்பு
சென்னை: சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதல் அறிவிப்பை ரஷ்யா கடுமையாக எதிர்ப்பதால், உள்நாட்டில் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மேற்காசியாவில் நிலவும் அசாதாரண நெருக்கடி சற்றே குறையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு பிராந்திய பொருளாதார நிலை குறித்து அமெரிக்காவின் நிதித் துறை அறிக்கை வெளியிடவிருக்கிறது. அதில் இந்த மாதம் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த 85 பில்லியன் டாலர் திட்டம் என்னவென்பதையும் தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

ரூபாய் மதிப்பு
சிரியப் போர் மட்டுமல்ல, ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்தாலும் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் சூழல் உள்ளது.
இப்போது தங்கத்துக்கு உள்ளூர் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால், கையிலிருக்கும் தங்கத்தை விற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள். இதனால் உள்ளூரில் தங்கம் சற்று அதிகமாகவே கிடைக்கிறது. இதனால் தங்க இறக்குமதியை ஓரளவு குறைக்கக் கூடும். அப்படிக் குறைந்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளது.
ரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறு உயர்வு கூட பெட்ரோல், தங்கம் போன்றவற்றின் இறக்குமதி மதிப்பைக் குறைக்க உதவும். ஆக இவை அனைத்துமே சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பொறுத்துள்ளது.
மார்க்கெட்டில் தங்க வர்த்தகம்
இன்றைய நிலவரப்படி ஆசிய தங்க வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1393.69 டாலருக்கு விற்பனையானது. கோல்ட் ப்யூச்சர் டிசம்பரில் 1393.40 ஆக முதிர்வடைகிறது. உள்ளூர் சந்தையில் 10 கிராம் ஆபரணத் தங்கம் ரூ 31940 ஆகவும், சுத்தத் தங்கம் ரூ 32100 ஆகவும் உள்ளது. பண்டச் சந்தையில் தங்கப் பத்திரங்கள் ரூ 35000 வரை விலை போகின்றன.
கச்சா விலை நிலவரம்...
சிரியப் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் சற்று குறையும் வாய்ப்புள்ளது. வரும் அக்டோபரில் ப்ரென்ட் க்ரூட் ஒப்பந்த விலை 114.99 டாலராகவும், வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியேட் 107.45 டாலராகக் குறையவும் வாய்ப்புள்ளது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications