For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உம்மன் சாண்டிக்கு கருப்புக் கொடி காட்டியவரின் மர்ம உறுப்பில் சரமாரியாக அடித்த எஸ்.ஐ.!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் மாவட்ட தோட்டப் பயிர் கொள்முதல் மையத்தைத் திறப்பதற்காக வந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியை கருப்புக் கொடி காட்டியும், அழுகிய முட்டைளையும் வீசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டாக்காரர்கள் வரவேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருப்புக் கொடி காட்டிய ஒரு தொண்டரின் மர்ம உறுப்பை போலீஸார் தாக்கி சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

சூரிய சக்தி ஊழல் விவகாரம் தொடர்பாக உம்மன் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதில் பங்கேற்ற பலர் அழுகிய முட்டைகளை முதல்வரின் கார் மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை அடக்க போலீஸார் கடுமையான முறைகளைக் கையாண்டனர். அப்போது ஒரு போராட்டாக்கரரை அடித்து உதைத்த போலீஸார் அவரது ஆணுறுப்பிலும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

போலீஸார் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களை தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். இதில் காயமடைந்த ஒரு தொண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Black flags and rotten eggs welcome ministers' convoy

கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

இந்த நிலையில் தொண்டர்கள் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்கியும், தொண்டர் ஒருவரின் ஆணுறுப்பி் தாக்குதல் நடத்தியவருமான சப் இன்ஸ்பெக்டர் விஜயதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநில உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த அந்த 32 வயது ஜெயபிரசாத் என்ற தொண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
Police tampered the genital organ of a CPM activist on monday for showing black flag to the Chief Minister Oommen Chandy. The incident took place at Anayara, near Thiruvananthapuram. The protest was the part of CPM strike for the resignation of CM in Solar Scam. The CM wascomming for the inasuguration of Horticorp district procurement center at Anayara. Agricultural minister KP Mohanan was also with him. The protesters showed black flags and threw rotten eggs on the vehicles of CM and agricultural minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X