10 ஆண்டுகளாக பலாத்காரம்… தந்தை, சகோதரன் மீது இளம் பெண் அதிர்ச்சி புகார்

Subscribe to Oneindia Tamil

Woman tells shocking tale of sexual abuse at CM Akhilesh's durbar
லக்னௌ: பத்தாண்டு காலமாக தந்தையும், சகோதரனும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி வருவதாக உத்தரபிரதேச முதல்வரிடம் அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்றை தெரிவித்தார் இளம் பெண் ஒருவர்.

முதவ்வர் அகிலேஷ் யாதவ் வாரந்தோறும் ‘ஜனதா தர்சன்' என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

அப்போது ஒரு அழகுக்கலை நிபுணர் ஒருவர் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தார். தன்னுடைய வீடு லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வசிப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகாலமாக தந்தையும், சகோதரனும் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்றை தெரிவித்தார்.

இந்த செயலுக்கு தனது தாயும் உடந்தையாக இருக்கிறார் என்றும் கூறினார். தனது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சகோதரன் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். தனது 14 வயதில் இருந்து இருவரிடமும் சிக்கி இன்னல்களுக்கு ஆளாகிவருவதாகவும் அந்த இளம் பெண் அழுது கொண்டே தெரிவித்தார்.

அந்த பெண் விவரித்தவற்றை கேட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் அகிலேஷ் யாதவ், புகார் கூறிய பெண்ணின் தந்தையையும், சகோதரனையும் கைது செய்ய உத்தரவிட்டதோடு பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்த பெண் மகளிர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பில் இருப்பார் என்று போலீசார் கூறினார். அழகுக்கலை படிப்பிற்கு சென்ற இடத்தில் தனக்கு நேரும் கொடுமைகளை கூறி அந்த பெண் அழுதுள்ளார். அப்போது அவர்கள் ஆலோசனை கூறியதை அடுத்து முதல்வரின் ஜனதா தர்சனில் சந்தித்து இருவர் மீதும் புகார் கூறி சிறைக்கு அனுப்பிவைத்துள்ளார் இளம்பெண்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+