அவதூறு வழக்கில் விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் எச்சரிக்கை! … இது விழுப்புரம் கோர்ட்

கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற தே.மு.தி.க பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதனை கண்டித்த நீதிபதி, வரும் 25ஆம் தேதி விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது. ஜூலை வரை 11 வாய்தாக்கள் நடைபெற்றன. இதில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. ஜூலை 1 ஆம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பாக விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் விளக்கம் கொடுத்ததால் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 29ம் தேதி வந்த போது விஜயகாந்த் ஆஜராகவில்லை. அப்போது மீண்டும் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications