தலைவா பிரச்சினை... விஜய் அரசியல்.. முக ஸ்டாலின் கமெண்ட்ஸ்!
விஸ்வரூபம், தலைவா படப் பிரச்சினைகள் மற்றும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பட பிரச்சினைகளுக்கு முதல்வரின் ஈகோதான் காரணம் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கருத்து தெரிவித்துளளார்.

விஸ்வரூபம், தலைவா சிக்கல்கள்...
ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "விஸ்வரூபம்', 'தலைவா' பட சிக்கல் குறித்த கேள்விக்கு, "கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை," என்று கூறியிருந்தார்.

தன்னை மிஞ்சி யாரும்...
தொடர்ந்து அவர் கூறுகையில், "ஆனால், 'விஸ்வரூபம்' எடுப்பவர்களையும், 'தலைவராக'க் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும்; தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட 'அஸ்திரம்' அது. 'எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா?' என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!'' என்று கருத்து கூறியுள்ளார்.

விஜய் அரசியல்
''நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?'' என்ற மற்றொரு கேள்விக்கு, "நடிகர்கள் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வரலாம். வரவேற்போம்.இது ஜனநாயக நாடு; இன்னின்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது!,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

மரியான்
சமீபத்தில் தான் பார்த்ததில்பிடித்த படம் தனுஷ் நடித்த மரியான் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ











Click it and Unblock the Notifications