தண்ணி அடிக்கும்போது தகராறு.. நண்பரை அடித்து, கத்தியால் குத்திக் கொன்ற நால்வர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மதுபோதை தகராறில் நண்பர்கள் 4பேர் சேர்ந்து சக நண்பரை அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் சங்கர். இவர் டிராக்டர் மூலமாக அப்பகுதியிலுள்ள வீடுகள், தொழில்நிறுவனங்கள் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வந்தார். இவருடன் இவரது நண்பர்கள் 4பேர் சேர்ந்து அதே தொழிலை செய்து வந்தனர்.

நேற்று மதியம் நண்பர்கள் 5பேரும் சேர்ந்து திட்டங்குளம் காட்டுப்பகுதியில் மது அருந்தினர். அப்போது மதுவை கலந்து பங்கு வைத்து கொடுப்பதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கரின் சகநண்பர்கள் 4பேரும் சேர்ந்து சங்கரை சராமரியாக அடித்து உதைத்ததுடன், கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

தகவல் அறிந்த கோவில்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் நண்பரை சகநண்பர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+