அனல் கிளப்பும் இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை!
லண்டன்: இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை என்ற பெயர் பெற்றுள்ள டிரூ ஆஸ்லின் கன்னிங்காம், இங்கிலாந்தின் மல்யுத்த மேடைகளில் அனல் கிளப்பி வருகிறாராம்.
அவருடன் எதிர்த்து மோதும் ஆண் வீரர்கள் ஆஸ்லின் விடும் குத்துக்களைத் தாங்க முடியாமல் தடுமாறிப் போய் விடுகிறார்களாம்.
5 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட 57 கிலோ எடை கொண்ட ஆஸ்லின் மல்யுத்தத்தில் ஆண் வீரர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலம் கொண்டவராக விளங்குகிறார்.

திருநங்கையாக
முன்பு ஹார்லி ரைடர் என்ற பெயரில் ஆணாக இருந்தவர்தான் ஆஸ்லின். பின்னர் அவர் அறுவைச் சிகிச்சை மூலம் முழுமையான திருநங்கையாக மாறினார்.

முதல் திருநங்கை
ஆஸ்லின்தான் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே அரவாணி மல்யுத்த வீராங்கனை ஆவார். 2007ம்ஆண்டு இவர் ஆணாக இருந்து பெண்ணாகமாறியவர் ஆவார். தொடக்கத்திலிருந்தே பெண் மல்யுத்த வீராங்கனையாக திகழ வேண்டும் என்பதே இவரது லட்சியமாகும். தற்போது தனது லட்சியத்தில் இவர் வெற்றி கண்டுள்ளார்.
பல மாதப் பயிற்சிக்குப் பின்னர் தற்போது ஆண்களுடன் மோதி வெற்றி கண்டு வருகிறார்.

மேக் அப் கலைஞர்
லீட்ஸ் நகரைச் சேர்ந்தவரான ஆஸ்லின், மேக்கப் கலைஞராக இருக்கிறார். இவருக்கு 18 வயதாக இருந்தபோதுதான் பெண்மையின் பல லட்சணங்கள் இவருக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

முழுமையான பெண்ணானார்
24 வயதாகும் ஆஸ்லின், டீன் ஏஜ் வயதாக இருந்தபோது பெண் வீராங்கனைகளுடன் மோதி வந்தார். அப்போது அவர் ஆணாக இருந்தார். பெண்களுடனேயே பழகி வந்த அவர் பின்னர் தன்னை முழுமையாக பெண்ணாக கருதத் தொடங்கினார். 2007ம் ஆண்டு முழுமையான பெண்ணாகவும் மாறினார்.

மல்யுத்த வீராங்கனை
கடந்த 3 மாதங்களாக அவர் பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். தன்னுடன்மோதுவதில் ஆண் வீரர்கள் சங்கோஜப்படுவதில்லை என்றும் நன்கு ஊக்குவிக்கிறார்கள் என்றும் பெருமையுடன் சொல்கிறார் ஆஸ்லின்.

பாசமாக இருக்கிறார்கள்
அனைவரும் தன்னிடம் பாசத்துடன் பழகுவதாகவும், அரவாணி என்று கேலி செய்வதில்லை என்றும், போட்டியின்போது உண்மையாக மோதுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் கூறுகிறார் ஆஸ்லின்.
தனது வாழ்க்கை தான் நினைத்தபடி செல்வதாக கூறும் ஆஸ்லின், தனக்கு கிடைத்து வரும் அனுபவங்கள் குறித்தும் பெருமிதம் அடைகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications