3 யு.கே.ஜி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பி.டி டீச்சருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
கோவை: கோவை, சின்னியம்பாளையம் அருகே தனியார் பள்ளியில் 3 யு.கே.ஜி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியருக்கு பெற்றோர்களும், உறவினர்களும் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை, சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.ஜி.புதூரில் ஸ்ரீ விவேகானந்த மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் 5 வயதான சிறுமி நேற்று மாலை தனது வீட்டிற்கு சென்று சிறுநீர் கழிக்கும் போது வலிப்பதாக கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தை தாக்கப்பட்டு இருப்பதும் பாலியல் முயற்சி நடைபெற்று இருந்ததும் தெரியவந்துள்ளது.
குழந்தையிடம் விசாரித்த போது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விவேக் என்பவர் குழந்தையை பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதனால் ஆவேசமடைந்த பெற்றோர், இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி அறை ஓன்றில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் விவேக்கை கடுமையாக தாக்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விவேக்கை மீட்டு பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதே ஆசிரியர் 3 யுகேஜி தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. அந்த 3 மாணவிகளையும் மருத்துவபரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர்.
ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் ஆசிரியர் தினத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஓருவர் ஒழுங்கீனமாக நடந்துள்ள சம்பவம் சக ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் விவேக்கை பள்ளியில் இருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications