நித்தியானந்தா- ரஞ்சிதா ‘அந்தரங்கக் காட்சிகள்’ போலியானவை: விஜய் டிவி மன்னிப்பு கேட்க உத்தரவு
சென்னை: நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல்.

குற்றம்...நடந்தது என்ன?
கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.

மார்ஃபிங் காட்சிகள்....
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட விஜய் டிவி நிறுவனம் மீது நடிகை ரஞ்சிதா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தோடு, சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்மையானவை அல்ல, மார்ஃபிங் செய்யப்பட்டவை எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

புகார்....
இது குறித்து டிவி தன்னாட்சி ஒழுங்கு முறை அமைப்பின் முன்பு ஆஜராகி ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார் ரஞ்சிதா.

மன்னிப்பு கேட்க உத்தரவு....
இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கவுன்சில் ஸ்டார் விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மார்ஃபிங் உறுதி....
இதுதொடர்பாக அந்த கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணையில் அந்த வீடியோ காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்பு வாசகம் ஸ்கிரோல்...
மேலும் செப்டம்பர் 9ம் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை, மன்னிப்பு கேட்கும் வாசகத்தை ஸ்கிரோல் செய்து ஒளிபரப்ப வேண்டும்.

விதிகளை மீறிய சேனல்....
புகார்தாரரின் அடிப்படை உரிமைகளை இந்த டிவி நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும், ஒழுங்குமுறை அமைப்பின் விதிகளையும் இந்த டிவி நிறுவனம் அப்பட்டமாக மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications