பசியால் அழுத குழந்தை... மொபைட் ஓட்டியவாறு ‘தாய்ப்பால்’ கொடுத்த சீனப்பெண்
பீஜிங்: சீனாவில் ஒரு பெண் மொபெட்டில் பயணித்தபடி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து போலீஸில் மாட்டியுள்ளார்.
தாய்ப்பாலிற்கும், தாய்ப்பாசத்திற்கு நிகரானது உலகில் வேறொன்றுமில்லை. ஆனால், அதற்கும் இடம் பொருள் உண்டு என்பதை உணர்த்தியுள்ளது சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று.
சீனப்பெண் ஒருவர் மொபெட் ஓட்டியவாறே, பசியால் அழுத தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதனைக் கண்ட போலீசார், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறியுள்ளனர்.

தாய்ப்பாசம்...
சீனாவின் யூஷூ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தெருக்கள் வழியாக மொபெட்டில் பயணித்த இப்பெண் போகும்போதே ஓடும் வண்டியில் வைத்தே தனது குழந்தைக்குப் பால் கொடுத்தபடி போயுள்ளார்.

18 மாதக் குழந்தை....
இதைப் பார்த்த போலீஸ்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அக்குழந்தைக்கு 18 மாத வயதாகிறது. தனது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு மொபெட் ஓட்டியபடி பால் கொடுத்துள்ளார் அப்பெண்.

வண்டியை ஓட்டிய படியே....
ஒரு கையை ஹேண்டில் பாரில் வைத்தபடி இன்னொரு கையால் குழந்தையை அணைத்துக் கொண்டு பால் கொடுத்தபடி போனார் அப்பெண் என்று அப்பெண்ணை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

எச்சரிக்கை....
மறுபடியும் இதேபோல செய்தால் வாகனத்தைப் பறிமுதல் செய்து விடுவோம் என போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

செல்போன் பேசறத விட....
போலீஸார் அப்பெண்ணை தடுத்து நிறுத்தியபோது அப்பெண் போலீஸாரிடம், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டுவதை விட இது பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடாது என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications