இந்திய நிலைகள் மீது மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பிராந்தியத்தில் மெந்தார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராம மக்களை நோக்கி பாகிஸ்தான் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது.
இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications