ஜம்மு காஷ்மீருக்காக இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: ஹபீஸ் சயீத் பகிரங்க எச்சரிக்கை!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்காக இந்தியாவின் எந்த பகுதி மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தானில் நடந்த பேரணியில் தீவிரவாதி ஹபீஸ் சயீத் கொக்கரித்திருக்கிறார்.
மும்பை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் இந்தியாவால் தேடப்படுகிற நபர் ஹபீஸ் சயீஸ். அமெரிக்காவும் ஹபீஸ் சையத் தலைக்கு பரிசுத் தொகை நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணிக்கு ஹபீஸ் சயீத் தலைமை வகித்திருக்கிறார். அத்துடன் அப்பேரணியில் பேசுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் நம் மீது கோபத்தில் இருக்கின்றன. இதற்குக் காரணம் நம்மிடம் கடவுள் இருக்கிறார் என்பதற்காக.
ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தையும் விடுதலை அடையச் செய்யும் வரை நமது போராட்டம் தொடரும். ஜம்மு காஷ்மீரை விடுவிப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
பாகிஸ்தானில் பிடிபட்ட சப்ரஜித்சிங் ஒரு தீவிரவாதி. அந்த தீவிரவாதிக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தி அடக்கம் செய்கிறது. அப்படியானால் இந்திய ராணுவமும் இந்திய அரசும் தீவிரவாதிகள்தானே..
ஜம்மு காஷ்மீர் எந்தவித சர்ச்சைக்குமே உரிய பகுதி அல்ல என்று இந்தியா தொடர்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிம் எங்களால் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.
ஹபீஸ் சயீத் பங்கேற்ற கூட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவுமே மும்பை போன்ற நிலைமைக்குள்ளாக்க நேரிடும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தியாவுக்கு யாரெல்லாம் நட்பு சக்திகளோ அவர்களெல்லாம் துரோகிகளே என்றும் குரல் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications