மறுபடியும் மொதல்ல இருந்து… 15 நாட்களில் மின் உற்பத்தி….: நாராயணசாமி!
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் 15 நாட்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் முடிவடைந்துவிட்டது. எனவே இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் அங்கு மின் உற்பத்தியை தொடங்கிவிடுவோம் என்றார்.
அங்கு மின்சார உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். 2வது யூனிட்டில் 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. எனவே 2வது யூனிட்டில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
நாராயணசாமி சென்னை வரும்போதெல்லாம் இன்னும் 15 நாட்களில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும்" என்று கூறுவார்.
கடந்த ஒருவருடமாக எத்தனையோ 15 நாட்களை கடந்துவிட்டபோதிலும் மின் உற்பத்தி தொடங்கியபாடில்லை. இதை வைத்து டுவிட்டர், ஃபேஸ்புக்குகளில் நக்கலடிப்பார்கள். இதனையடுத்து இந்த 15 நாள் டயலாக்கை சில வாரங்களாக சொல்லாமல் இருந்து வந்தார்.
தற்போது கூடங்குளம் அணு மின் உலையின் முதல் யூனிட் கட்டுமான பணிகள் முடிவடைந்து, அணுமின் கழகத்தின் ஒப்புதலுடன் சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இங்கு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலேயே மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் இன்னும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இந்த முறையாவது அவர் சொன்னது பலிக்குமா என்று பார்ப்போம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications