இன்று மழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வாநிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர கடற்கரை அருகே மேற்கு மத்திய வங்கக்கடலின் மேல் அடுக்கில் காற்றின் சுழற்சி உருவாக உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.
சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு:
செந்துறை, தஞ்சாவூர், பரமக்குடி தலா 8 செ.மீ.
மதுரை தெற்கு 7 செ.மீ., அரியலூர், லால்குடி, திருக்கோவிலூர், ஏற்காடு, திருத்துறைப்பூண்டி தலா 6 செ.மீ.
சேலம், பரமத்தி வேலூர், தம்மம்பட்டி, சமயபுரம், அருப்புக்கோட்டை, சிதம்பரம் தலா 5 செ.மீ.
தர்மபுரி, வேதாரண்யம், ஆடுதுறை, பெரம்பலூர், கிராண்ட் அணைக்கட்டு, திருக்காட்டுப்பள்ளி தலா 4 செ.மீ.
நாமக்கல், திருச்சி விமானநிலையம், சங்கராபுரம், விளாத்திக்குளம், தேவலா, குன்னூர், புள்ளம்பாடி, தருமபுரி, சேத்தியாதோப்பு, பாடலூர், செஞ்சி, கடவூர், ஓமலூர் தலா 3 செ.மீ., கெட்டி, சாத்தனூர், அன்னூர், கோவிலங்குளம், சங்ககிரி, திருவிடைமருதூர், காட்டுமன்னார்கோவில், தக்களை, குமாரப்பாளையம், மானாமதுரை, தொழுதூர், மாமல்லபுரம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, வாழப்பாடி, திருப்பத்தூர், நடுவட்டம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம், ராசிபுரம், கும்பகோணம், விராலி மலை உள்பட பல இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications