தமிழைப் புகழ்ந்த இந்தி எம்.பிக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை: ராஜ்யசபாவில் தமிழைப் புகழ்ந்தும், தமிழை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசிய உத்தரகாண்ட் பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தருண் விஜய் பேச்சை அறிந்து மகிழ்ந்து போய் விட்டாராம் கருணாநிதி. உடனடியாக அவர், திமுக எம்.பி. கேபி.ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு தருண் விஜய்யை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
வட இந்தியர் ஒருவர் செம்மொழி தகுதி பெற்ற தமிழின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசியதால் தான் மகிழ்ந்து போனதாகவும், தனது பாராட்டுகளை அவருக்குத் தெரிவிக்கும்படியும் கே.பி.ராமலிங்கத்திடம் கூறியுள்ளார் கருணாநிதி. இதையடுத்து ராமலிங்கம், தருண் விஜய்யை சந்தித்து கருணாநிதியின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த தருண் விஜய்யும், கருணாநிதிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முனைப்புடன் நடத்திய இயக்கம் திமுக என்ற போதிலும், தமிழைப் புகழ்ந்த இந்தி எம்.பிக்கு முதல் ஆளாக திமுகதான் பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications