டெல்லி மாணவி பலாத்கார வழக்கு.. 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!: நாளை தண்டனை அறிவிப்பு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டை உலுக்கிய டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த 4 பேருக்குமான தண்டனை விவரம் என்ன என்பது நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.

வழக்கு என்ன?

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி ஓடும் பேருந்தில் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Verdict in Delhi gang rape case today

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு- 4 குற்றவாளிகளுக்கு தூக்கு?

ஒருவன் மைனர்

இதில் ஒருவன் மைனர். இவனுக்கு அண்மையில்தான் 3 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 5 பேரில் ஒருவன் டெல்லி சிறையில் இருந்த போதே தற்கொலை செய்து கொண்டான்.

4 குற்றவாளிகள் யார்?

இதைத் தொடர்ந்து 4 குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகளான வினய்சர்மா, அக்சய் தாக்கூர், பவான் குப்தா மற்றும் முகேஷ் ஆகியோர் மீதான இந்த வழக்கு கடந்த 9 மாதங்களாக நடைபெற்றது. போலீஸ் தரப்பில் 85 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இன்று தீர்ப்பு- 4 பேரும் குற்றவாளிகளே!

இந்த வழக்கில் கடந்த 3- ந் தேதியுடன் விசாரணை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி யோகேஷ் கன்னா அறிவித்திருந்தார். இன்று பகல் 12.30 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதி 4 பேரும் குற்றவாளிகளே என்று அறிவித்தார். அத்துடன் இந்த 4 பேருக்குமான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+