ஜெயலலிதா பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதா பிரதமராவதை தடுக்கத்தான் உணவுப் பாதுகாப்பு மசோதா அவசரம் அவரசமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் கோவில்பட்டியில் சாதனை விளக்க பொது கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் சோனியா நிறைவேற்றியிருக்கும் உணவு பாதுகாப்பு திட்டம் தமிழகத்திற்கு எதிரான திட்டம்.
உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியது முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக வந்துவிடக்கூடாது என்று தடுப்பதற்கான செயலாகும். இந்த திட்டத்தால் ஒரு லட்சம் டன் அரிசி கழிவாக போய்விடும். தமிழகத்தில் தற்பொழுதுள்ள பொதுவிநியோகத்திட்டமே போதுமானது.
பிரதமரான மன்மோகன் சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு ராகுல் தலைமையிலான அரசியலுக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அவர் சோனியாவின் ஆலோசனையை கேட்காமல் எதையுமே செய்யமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே. இலைமறைகாயாக இருந்த இந்த நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பணவீக்கத்திற்கும், பொருளாதார சரிவிற்கும், விலைவாசி உச்சத்திற்கும் காரணமே மன்மோகன்தான். தமிழின தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதியும், சோனியாவும் இணைந்து முதல்வர் ஜெயலலிதா பிரதமராவதைத் தடுக்கலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது பலிக்காது. வரும் எம்.பி தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்றார் நாஞ்சில் சம்பத்.
ம.தி.மு.க.வில் இருந்த பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமுறை பேசிய இடம் கோவில்பட்டி. தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும், தே.மு.தி.க.வையும் வாய்மொழியால் அர்ச்சித்த இடம் கோவில்பட்டி.
அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக பொறுப்பேற்றதும் அதே கோவில்பட்டியில் இன்று தி.மு.க.வையும், ம.தி.மு.க.வையும், தே.மு.தி.கவையும் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க கரை வேட்டியில் அ.தி.மு.க தோரணையில் முதன்முதலில் பேச ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications