விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்… 10,000 போலீசார் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் சிலைகளின் பாதுகாப்பிற்காகவும்,ஊர்வலத்தை ஒட்டியும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் செப்டம்பர் 9ம் தேதி முதல் வரும் 22ம் ந் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் காட்சி அளிக்கிறார்.

பிள்ளையார்பட்டியில்…
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆக. 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஞாயிறன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் 10ம் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில், கோயில் நடை திறக்கப்பட்டது.கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளுக்கு பிறகு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின்னர் விநாயகர், சண்டிகேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.மதியம் 1 மணியளவில் 18 படி அரிசியில் செய்யப்பட்ட ‘மெகா சைஸ்' கொழுக்கட்டை மூலவருக்கு படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில்
தஞ்சை மாவட்டத்தில் பா.ஜ., மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மொத்தம், 297 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, நேற்று வழிபாடு நடத்தினர். இதில் நேற்று மட்டும், 55 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

சென்னையில் 1705 சிலைகள்
சென்னையில் 1705 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகள் ஆங்காங்கே வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் 1 வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

செப்டம்பர் 15ல்
சென்னையில் வருகிற 15 ஆம் தேதியன்று இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.இதில் ராமகோபாலன் பங்கேற்கிறார்.
மற்ற இந்து அமைப்புகள் சார்பில் 4 நாட்கள் ஊர் வலம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி முதல் அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்படும் வரை சுமார் 1 வார காலத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாட்டு வண்டிக்கு தடை
எளிதில் தீப்பிடிக்கக் கூடிய ஓலை கொட்டகைகள் போன்றவற்றை அமைக்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அனு மிக்கப்பட்ட சாலை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்து செல்லக் கூடாது.

பட்டாசு வெடிக்க கூடாது
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
இந்து முன்னணி ஊர்வலம் நடைபெறும் போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பதட்டமான ஒரு சில பகுதிகளிலும் விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications