குர்கானில் தொழுகை நடைபெற்ற சர்ச்சைக்குரிய இடத்தில் கோவர்தன் பூஜை- பாஜகவின் கபில் மிஸ்ரா பங்கேற்பு
குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் வலதுசாரி அமைப்புகள் இன்று கோவர்தன் பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் கபில் மிஸ்ரா பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.
ஹரியானாவின் குர்கானில் பல பொது இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்தி வந்தனர். இதற்கு வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன.
குர்கானில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற இடத்தில் வலதுசாரி குழுவினர் திடீரென நுழைந்து முழக்கங்களை எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வலதுசாரி அமைப்பினர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டமும் அனுமதி ரத்தும்
மேலும் இஸ்லாமியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்தும் இடங்களுக்கு எதிரே உள்ள பகுதிகளில் வழிபாடு நடத்துவோம் என வலதுசாரிகள் கூட்டமைப்பான சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதி அறிவித்தது. இந்த கூட்டமைப்பில் மொத்தம் 22 வலதுசாரி இயக்கங்கள் இணைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து குர்கான் நிர்வாகம் வியாழக்கிழமையன்று 8 பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததை திரும்பப் பெற்றது. உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொது இடங்களில் தொழுகை நடத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாகவும் குர்கான் நிர்வாகம் தெரிவித்தது.

இன்று கோவர்தன் பூஜை
இந்நிலையில் குர்கானில் வழக்கமாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த இடத்தில் இன்று வலதுசாரி அமைப்பினர் கோவர்தன் பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் கபில் மிஸ்ராவும் பங்கேற்றார். இது தொடர்பாக கபில் மிஸ்ரா கூறுகையில், ஒவ்வொரு வாரமும் தொழுகை என்ற பெயரில் சாலைகளை மறித்து கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது. அதனால்தான் பொதுமக்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். அது நியாயமான குரல். அவர்களது கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றார்.

கபில் மிஸ்ராவின் பின்னணி
கடந்த 2020-ம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களை போலீசார் நடத்த அனுமதிக்கக் கூடாது என கபில் மிஸ்ரா தலைமையில் சி.ஏ.ஏ.ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு மறுநாள் வடகிழக்கு டெல்லியில் மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது நினைவில் கொள்ளத்தக்கது.

எங்கே தொழுகை நடைபெறும்?
இதனிடையே வேறு பொது இடங்கள் அல்லது வக்பு வாரியத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கே தொழுகை நடத்த இருப்பதாக இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர். தற்போது இந்துக்கள், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கான இடங்களை இந்த குழு தேர்வு செய்யும் என குர்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications