செம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்!
அபுதாபி: அபுதாபியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஷாரூக் கான், மகன், மகள் ஆகியோர் போட்டியை ரசித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருக்கு இடையே நேற்று முன் தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாரூக் கான் கலந்து கொண்டிருந்தார்.
அவர் தனது மகன் ஆர்யா கான் மற்றும் மகள் சுஹானா கானுடன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸின் விளையாட்டை கண்டு ஷாரூக் கான் குடும்பத்தினர் ஆரவாரம் செய்தனர்.

மும்பை இந்தியன்ஸ்
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தங்களது கொல்கத்தா அணியின் சில அதிரடி ஷாட்டுகளையும் விக்கெட் இழப்புகளையும் ஷாரூக்கான் குடும்பத்தினர் வெவ்வேறு முகப்பாவனைகளுடன் வெளிப்படுத்தினர்.

வெள்ளை நிற உடை
ஷாரூக்கான் வெள்ளை நிற உடையணிந்து கொண்டு மாஸ்க் அணிந்துள்ளார். அவரது மகள் சுஹானா மாஸ்க் அணியவில்லை. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அரைக்கை ஜாக்கெட்டை அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சுஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மனைவி
அதில் தனது வெட்கி சிரிக்கும் முகப்பாவனைகளையும் தந்தை ஷாரூக்குடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாரூக்கானும் அவரது மகளும் மிகவும் அழகாக உள்ளதாக ஒரு நெட்டிசன் பாராட்டியுள்ளார்.

முதல் முறை அல்ல
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விளையாட்டை ஷாரூக்கான் தனது குடும்பத்தினர் பார்ப்பது இது முதல்முறையல்ல. முன்பு கொல்கத்தா அணி கலந்து கொண்ட போட்டிகளில் ஷாரூக்கானும் அவரது மனைவி கவுரி கானும் இணைந்து கலந்து கொண்டதும், அவர்கள் போட்டியை ரசித்து ஆர்ப்பரித்ததும் குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications