ஐக்கிய அரபு அமீரக மறுசீரமைப்பின் முன்னோடி- இந்தியாவின் நெருங்கிய நண்பர் மறைந்த அதிபர் ஷேக் கலீஃபா

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தை மறுசீரமைப்புக்குள்ளாக்கிய முன்னோடியாகவும் இந்தியாவின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர் அந்நாட்டின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சிற்பியாக, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான். 2004-ம் ஆண்டு அவர் மறைந்த பின்னர் அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது மூத்த மகன் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்.

 UAE President Sheikh Khalifa bin Zayed and Relations with India

1948-ம் ஆண்டு பிறந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் 2-வது ஜனாதிபதி. ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி எமிரேட்ஸின் 16-ம் ஆட்சியாளர். ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமீரகம் விஸ்வரூப வளர்ச்சியை நோக்கி பீடு நடை போட்டது.உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான ராஜீய உறவுகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு மிக நெருக்கமானதாக வளர்ந்துள்ளது. 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அந்நாட்டுக்கு சென்றிருந்தார். சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிரதமர் அந்நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றது அதுதான் முதல் முறை. இதன் பின்னர் 2017-ல் அபுதாபி பட்டத்து இளவசர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.

 UAE President Sheikh Khalifa bin Zayed and Relations with India

பின்னர் 2018,2019-ம் ஆண்டுகளிலும் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக பயணம் மேற்கொண்டிருந்தார். 2019-ம் ஆண்டில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதான தி ஆர்டர் ஆஃப் சையது விருது நமது பாரத பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜையத் அல் நஹ்யான் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+