விஜய் ஆண்டனி பொண்ணு பாவம்.. இப்படி பேசலாமா.. விலாசி எடுத்த நடிகர் ஜனகராஜ்.. அடுக்கடுக்கான கேள்வி
சென்னை: 80ஸ்களில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த நடிகர் ஜனகராஜ் பல வருடம் கழித்து தற்போது பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதே சமயத்தில் youtube சேனல் மூலமாக பலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். அதுவும் இல்லாததை இருப்பது போன்று சொல்லி வருகிறார்கள் என்று ஜனகராஜ் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மறைந்த இந்த நடிகர் ஆர்எஸ் சிவாஜி மற்றும் விஜய் ஆண்டனியின் மகள் குறித்து கூட சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறார்கள் என்று நடிகர் ஜனகராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
தற்போது இன்டர்நெட் சேவை உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலர் எளிமையாக யூடியூப் சேனல் தொடங்கி விடுகிறார்கள்.. அதை பார்ப்பதற்காக பல கோடி மக்கள் அந்த சேனல்களை பாலோ செய்து வருகின்றனர். அதனால் தற்போது வருமானமும் அவர்களுக்கு கிடைக்கின்றது.
இந்த நிலையில் ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி அதன் மூலம் தங்களுக்கு வருமானம் கிடைப்பதற்காக யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தவறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் பல பிரபலங்கள் பற்றியும் தவறான கருத்துக்களையும், சர்ச்சையான பேச்சுகளையும் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் அதனால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் நான் என்னுடைய மகனோடு அமெரிக்காவிற்கு சென்று விட்டேன் என்றும் ஒரு சில செய்தி சேனல்களில் செய்திகள் வந்தது. அதேபோல இன்னும் சில செய்தி சேனல்களில் நான் அமெரிக்காவில் ரொம்பவே கஷ்டப்பட்டு தெருவில் யாரும் இல்லாமல் திரிந்து கொண்டிருப்பதாகவும் பரிதாப நிலையில் இருப்பதும் போன்றும் பலர் கூறி வருகிறார்கள். இது எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை இதை பார்த்து நான் மன அழுத்தத்தில் இருந்தேன்.
எனக்கு ஒரே ஒரு மகன்தான் இருக்கிறார். அவரும் சென்னையில் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய மகன் கூட அமெரிக்கா இதுவரைக்கும் போனதில்லை. ஆனால் நான் போனேன் என்று சொல்கிறார்கள். எனக்கு விசா கூட கிடையாது. நான் இதுவரைக்கும் போனதே கிடையாது. அதுபோல சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மகள் குறித்து கூட தவறாக சில சேனல்களில் போட்டு வருகிறார்கள். இதுவெல்லாம் எவ்வளவு கேவலமான செயல்.

நமக்கு வருமானம் வேண்டும் என்றால் இப்படியா செய்வது. நான் விஜய் ஆண்டனி மகள் பற்றிய செய்தியை கேட்டு ரொம்பவே வருத்தமடைந்துவிட்டேன். அந்த குழந்தைக்கு என்ன தெரியும். எதையும் ஹேண்டில் பண்ற வயசு கூட இல்லை. அதோட நிலைமை இப்படி ஆயிடுச்சு ஆனால் அதையும் வைத்து சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள். அதுபோல என்னோட நண்பன் என்னோடு பல படங்களில் நடித்த ஆர் எஸ் சிவாஜி கூட சமீபத்தில் தான் இறந்தார். அவர் பற்றியும் சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவெல்லாம் வருத்தத்தை கொடுக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகர் ஜனகராஜ் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications