அள்ளி அள்ளி கொடுத்த ஆனந்த் அம்பானி.. கேரள தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் மாஸ் காட்டிய அம்பானி குடும்பம்!
குருவாயூர்: கேரள சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ளது. 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 7, 2026 அன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4, 2026 அன்று அறிவிக்கப்படும்.
கேரள தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானும், முகேஷ் அம்பானியின் இளைய மகனுமான ஆனந்த் அம்பானி, கேரள மாநிலத்தில் கோயில் மேம்பாட்டுக்கும், கோயில் யானை வளர்ப்புக்கும் சுமார் 18 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி இந்த மாத துவக்கத்தில் மேற்கொண்ட கேரள பயணத்தின் போது, கேரளாவின் புகழ்பெற்ற தலிப்பரம்பாவில் உள்ள ராஜராஜேஸ்வரம் கோவிலுக்கும், குருவாயூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும் தலா 3 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை குருவாயூர் கோயிலுக்கு சென்ற அவர், குருவாயூரப்பனை தரிசித்து, கோயில் நிர்வாகத்திற்கு 3 கோடிக்கான காசோலையை அளித்தார். பின்னர் இரவு தலிப்பரம்பாவில் உள்ள ராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு சென்று வழிபாடுகளை செய்தார்.
ராஜராஜேஸ்வரம் கோயிலின் வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கு கோபுரத்தை புதுப்பிக்கும் பணிக்காக சுமார் 12 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்த அவர், தற்போது கோயிலில் நடைபெற்று வரும் திருத்தப் பணிகளுக்காக ரூ.3 கோடி தொகையும் ஆனந்த் அம்பானி நன்கொடையாக அளித்துள்ளார்.
யானைகள் பராமரிப்பு
ஆனந்த் அம்பானிக்கு யானைகள் எவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில் குருவாயூர் கோயிலில் உள்ள யானைகளின் பராமரிப்பு மற்றும் நலனுக்காக புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளதாக தெரிவித்தார். உயிரின பாதுகாப்பு திட்டத்தின் மூலம், யானைகளின் ஆரோக்கிய பராமரிப்பு, மருத்துவ சேவை, மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளார் ஆனந்த் அம்பானி.
கேரள மாநில தேர்தல்
கேரளாவில் ஆட்சியைத் தக்கவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) கூட்டணி கடைசி கட்ட பிரச்சாரத்தை இன்று முடிந்துள்ளது. மேலும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த பாஜக (NDA) ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) தலைமையிலான இந்த முன்னணி, கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. தற்போது "மூன்றாவது முறையாக" ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாகப் போராடுகிறது.
காங்கிரஸ் (INC) தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) எதிர்க்கட்சி கூட்டணி, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க "வெற்றி ஒன்றே இலக்கு" எனப் பிரசாரம் செய்து வருகிறது.
பெரும்பாலான தொகுதிகளில் LDF மற்றும் UDF இடையே நேரடிப் போட்டி இருந்தாலும், திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் திருச்சூர் போன்ற சில பகுதிகளில் பாஜக மூலம் மும்முனைப் போட்டியை உருவாகியுள்ளது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications