ஒரே ஒரு "முத்தம்" தந்த மாரிமுத்து.. ஒதுக்குப்புறத்தில் "அத்துமீறல்".. 17 வருஷமாம்.. ஜட்ஜ் அதிரடி
சிறுமிக்கு முத்தம் தந்த இளைஞருக்கு 17 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
அரியலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞருக்கு 17 வருட சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் ஆராமிர்தம். இவரது மகன் மாரிமுத்து.. 21 வயதாகிறது.. இவர் கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ம் தேதி, தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே, அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமி வந்து கொண்டிருந்தார்.. சிறுமியை பார்த்ததுமே, ஆசை வார்த்தை சொல்லி, அதே பைக்கில் ஏற்றி கொண்டு கடத்தி சென்றுள்ளார்...

முத்தம்
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, சிறுமிக்கு முத்தம் தந்துள்ளார் மாரிமுத்து.. இதுகுறித்து சிறுமி அழுதுகொண்டே வந்து, தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை சொல்லி உள்ளார்.. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் மாரிமுத்து மீது புகார் தந்தனர்.. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.

அதிரடி தீர்ப்பு
இது தொடர்பான வழக்கு, அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது... இந்நிலையில், தற்போது வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு சொன்னார்.. அதன்படி, சிறுமியை கடத்திச சென்ற குற்றத்துக்காக மாரிமுத்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

ஜெயிலில் மாரிமுத்து
இதையடுத்து மாரிமுத்துவை சிறையில் அடைப்பதற்காக கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்... உண்மையை சொல்லப்போனால், பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு கட்டவே போக்சோ சட்டம் இயற்றப்பட்டது.. அதன்படி,போக்சோவில் கைதாகும் குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுவது பொதுமக்களால் வரவேற்கப்பட்டும் வருகிறது. அதேபோல, வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.

வார்னிங்
ஆனாலும் பாலியல் குற்றங்கள் பெருகி கொண்டேயிருக்கின்றன.. வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகள் நம்ம தமிழ்நாட்டிலும் பெருகி வருவதை மறுக்க முடியாது.. எனவே, போக்சோவை இன்னும் கடுமைப்படுத்த வேண்டுமா? அல்லது கைதாகும் குற்றவாளிகளுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டுமா தெரியவில்லை.. எனினும், பெண் குழந்தைகளிடம் அத்துமீற நினைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவே, மாரியப்பனுக்கு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications