சித்தப்பாவுக்காக.. அரியலூரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மகன்.. வசமாக சிக்கியது எப்படி?
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சித்தப்பாவிற்கு பதிலாக ஆங்கில தேர்வு எழுதியபோது வசமாக சிக்கினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணை தேர்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி இன்று அறிவியல் பாட தேர்வுகள் நடந்து முடிந்தது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் நாளையுடன் 10ம் வகுப்பு துணை தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன.

முன்னதாக கடந்த 4ம் தேதி மொழிப்பாட தேர்வும், 5ம் தேதி விருப்ப மொழி பாட தேர்வும், 7ம் தேதி ஆங்கில தேர்வு, 8ம் தேதி கணித தேர்வும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது.
இந்த தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர். அந்த வகையில் அரிலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் எனும் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைதேர்வு நடந்து வருகிறது.
கடந்த 7 ம் தேதி ஆங்கில தேர்வு நட்நதது. அப்போது மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு ஆய்வு படையினர் அந்த பள்ளிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தேர்வு எழுதிய ஒருவரின் முகமும், அவர் வைத்திருந்த ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த போட்டோவும் வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து சந்கேத்தின் பேரில் அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
அதாவது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ஆங்கில தேர்வை எழுத வேண்டிய நபரின் பெயர் முகமது அலி. ஆனால் தேர்வு எழுதிய நபரின் பெயர் முகமது அஸ்லாம் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி முகமது அஸ்லாமுக்கு, முகமது அலி சித்தப்பா முறையாகும். முகமது அஸ்லாமின் தந்தையும், முகமது அலியும் அண்ணன் - தம்பியாகும்.
தனது சித்தப்பா முகமது அலி 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் தேர்ச்சியடையவில்லை. இதனால் அவரை பாஸ் ஆக்கும் வகையில் அண்ணன் மகனான முகமது அஸ்லாம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி சிக்கியது தெரியவந்தது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைதொடர்ந்து முகமது அஸ்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications