25 வருட போராட்டம்! நெகிழ்ச்சியில் உறைந்த அரியலூர் மக்கள்! அரசின் முடிவால்.. ஆனந்த கண்ணீர்! என்னாச்சு
அரியலூர்: தமிழ்நாடு அரசு மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பலவற்றை 25 வருடங்களுக்கு பிறகு அரசு மீண்டும் மக்களிடையே திருப்பி கொடுத்துள்ளது. அரியலூரில் நடந்துள்ள இந்த நெகிழ்ச்சி சம்பவம் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் அவ்வப்போது சில அரசு திட்டங்கள், சாலை பணிகள் ஆகியவற்றிற்காக மக்களுக்கு சொந்தமான நிலங்களை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்துவது வழக்கம். சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கூட கடுமையான எதிர்ப்பு எழுந்து, முந்தைய அதிமுக அரசுக்கு எதிராகவும் அது திரும்பியது.
கடந்த முறை அதிமுக ஆட்சிக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களில் இந்த திட்டமும் முக்கியமான ஒன்றாகும்.

அரியலூர்
இதேபோல் 1997ல் அரியலூரில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 9000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு தொழில்வளர்ச்சி துறை சார்பாக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி மையம் அமைப்பதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் அரசு மூலம் அப்போது மக்களுக்கு வழங்கப்பட்டது.

வழக்கு
இதை எதிர்த்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் வழக்கு தொடுத்தனர். அதன்பின் வந்த சட்டசபை தேர்தலிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதையடுத்து ஜெயங்கொண்டத்தில் அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஒரு ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும் என்று 2012ல் அந்த கோர்ட் உத்தரவு போட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியது. 2013ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த போது, இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு மேல்முறையீடு
அதிலும் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை. நிலத்திற்கு அதிக பணம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதால், அதில் எந்த திட்டத்தையும் மேற்கொள்ள முடியாமல் அரசு சிக்கலில் மாட்டியது. இதையடுத்து கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில், திமுக, இந்த நிலங்களில் திட்டங்களை தொடங்க முடியவில்லை என்றால் அதை மீண்டும் மக்களுக்கே கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தது. அதன்படியே தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளன.

திருப்பி அழிப்பு
அதன்படி தமிழ்நாடு அரசு 8,373 ஏக்கர் நிலங்கள் மீண்டும் மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. இது போக இந்த நிலங்கள் முன்பு கையகப்படுத்தப்பட்ட போது அரசு கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்காது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை திருப்பி கேட்காமல் நிலத்தை அரசு திருப்பி கொடுத்துள்ளது.

மகிழ்ச்சி
அப்பகுதி மக்கள் இடையே இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் 2 கிராமங்களின் நிலங்கள் கொடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள் தங்கள் நிலத்திற்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் எங்களுக்கும் நிலத்தை கொடுக்க வேண்டும். மற்ற கிராமங்கள் போல நாங்களும் பாதிக்கப்பட்டுளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரியலூர்
அரியலூரை சேர்ந்த 11 கிராம மக்கள் இந்த முடிவை வெகுவாக வரவேற்று உள்ளனர். 25 வருடங்களுக்கு பின் எங்களுக்கு எங்கள் நிலம் கிடைத்துள்ளது. அரசின் இந்த முடிவை பாராட்டுகிறோம். நிலத்தை மீட்க மிகவும் கஷ்டப்பட்டோம். இப்போது அரசே நிலத்தை கொடுப்பதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை காலம் நிலம் இல்லாமல் நாங்கள் பெரிய அளவில் கஷ்டப்பட்டோம், தற்போது அந்த கஷ்டங்களுக்கு முடிவு வந்துவிட்டது என்று அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications