Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறும் அரியலூர்.. முந்திரி காட்டில் அக்கப்போரு.. விவஸ்தை கெட்ட உறவு.. கூடாநட்பு கேடாய்தானே முடியும்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: முந்திரிக்காட்டில் மனைவி செய்த காரியத்தை பார்த்து, அரியலூரே அரண்டுபோய் கிடக்கிறது.. போலீசில், மனைவி எப்படி சிக்கினார்? என்பது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெண்மான்கொண்டான் செல்லும் சாலையில் ஒரு முந்திரி காடு உள்ளது.. இத அரசுக்கு சொந்தமான முந்திரி காடாகும்.

Ariyalur District incident and Do you know who is this Koyambedu Suresh, Anupriya

இந்த காட்டில், கடந்த மாதம் 29ம் தேதி ஒரு பிணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து, உடையார்பாளையம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை ஆய்வு செய்தனர். அப்போது அது ஒரு ஆண் சடலம் என்று தெரியவந்தது.

போலீசார்: பிறகு, போலீசார் வழக்குப்பதிவுசெய்து, சடலத்தின் அடையாளத்தை கண்டறிய முற்பட்டனர். அப்போதுதான், உயிரிழந்தவர் வடகடல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும், 43 வயதுடைய நபர் என்பதும் தெரியவந்தது.. இதற்கு பிறகு, கேஷூலாக காணப்பட்ட சுரேஷின் மனைவி மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது.. இறுதியில் எதிர்பார்த்தபடியே, மனைவிதான், கணவனை கொன்றது உறுதியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட சுரேஷின் மனைவி பெயர் அனுப்பிரியா.. 30 வயதாகிறது.. 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் மகனும் இருக்கிறார்கள். சுரேஷ் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.. சமீப காலமாக, அதாவது கடந்த 2 வருட காலமாக, அனுப்பிரியாவின் சித்தப்பா மகன் வேல்முருகன் அடிக்கடி வீட்டுக்கு வந்து போயுள்ளார்.

தங்கை: வேல்முருகனுக்கு 33 வயதாகிறது. அனுப்பிரியா இவருக்கு தங்கை முறையாகிறது. ஆனால், 2 பேருக்குமே நெருக்கம் அதிகமாகி, கள்ள காதல் உருவாகி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சுரேஷ் வேலை பார்த்து வந்ததால், அரியலூர் வீட்டில் இவர்களின் கள்ளக்காதல் பற்றி தெரியவில்லை. ஆரம்பத்தில் அண்ணன் - தங்கை இயல்பாக பேசுகிறார்கள் என்று சுரேஷ் நினைத்துள்ளார். ஆனால், இவர்களின் நெருக்கம், பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணியதுடன், இறுதியில் கையும் களவுமாகவே சிக்க வைத்துவிட்டது.

அதனால், மனைவியை சுரேஷ் பலமுறை கண்டித்திருக்கிறார். இந்த எரிச்சலால்தான், சுரேஷை கொலை செய்ய அனுப்பிரியா திட்டமிட்டார். தன்னுடைய பிளானை வேல்முருகனிடம் சொல்லவும், கொலை பிளான் ரெடியானது.

புது துணி: தீபாவளிக்காக, குழந்தைகளுக்கு புது டிரஸ் எடுத்து கொடுக்க வாருங்கள் என்று கடந்த 29ம் தேதி சுரேஷை, அரியலூருக்கு வரச்சொன்னார் அனுப்பிரியா.. அதன்படியே, கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பி வந்தார் சுரேஷ்.. அன்றைய தினம் இரவே, பைக்கில், வடகடல் கிராமத்துக்கு வெண்மான் கொண்டான் வழியாக சுரேஷை அழைத்து சென்றுள்ளார் அனுப்பிரியா..

கரெக்ட்டா முந்திரி தோப்பு அருகே பைக்கில் வந்தபோது, திடீரென மயக்கம் வருவதாகவும், வண்டியை உடனே நிப்பாட்டும்படியும் அனுப்பிரியா சொல்லி உள்ளார். மனைவிக்கு மயக்கம் என்பதால், பைக்கை நிறுத்திவிட்டு பதற்றத்துடன் சுரேஷ் கீழே இறங்கி நின்றார்.

அந்த நேரம்பார்த்து, முந்திரி தோப்பில் மறைந்திருந்த வேல்முருகன், கையில் அரிவாளுடன் பாய்ந்து, சுரேஷை சரமாரியாக வெட்டினார்.. இதில், அந்த முந்திரி காட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சுரேஷ் சாய்ந்தார்..

பரிதாப குழந்தைகள்: பிறகு, வெட்டப்பட்ட உடலை ஒன்றுசேர்த்து கட்டி, பெட்ரோல் ஊற்றி அனுப்பிரியாவும், வேல்முருகனும் எரித்திருக்கிறார்கள்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் வாக்குமூலமாக தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த கொலையில் எந்த க்ளூவும் கிடைக்காத நிலையில், உடையார்பாளையம் போலீசார் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டன.. அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, வேல்முருகன் வி.கைகாட்டி பகுதியில் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.. இந்த லாட்ஜூக்கு அனுப்பிரியாவும் வந்துபோயிருக்கிறார். அங்கிருக்கும் கேமராவில் இவர்கள் 2 பேரின் உருவமும் பதிவாகி உள்ளது..

லாட்ஜ் ரூம்: சுரேஷை கொலை செய்வதற்காகவே, இவர்கள் 2 பேரும் ரூம் எடுத்து தங்கினார்களாம். அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவு மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்துதான், போலீசார் வேல்முருகனையும் அனுப்பிரியாவையும் கைது செய்து, விசாரித்திருக்கிறார்கள். இறுதியில் உண்மையும் வெளிவந்துவிட்டது.

முந்திரி காட்டில் சுரேஷை கொன்றுவிட்டு, ஒரு சாக்கு பையில் மூட்டை கட்டி கடந்த 29-ம் தேதி அங்கேயே வைத்துவிட்டு இந்த ஜோடி வீட்டுக்கு போய்விட்டதாம். பிறகு மறுநாள் விடிகாலை, தீயனூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி சென்று, அதற்கு பிறகு, முந்திரிக்காட்டில் உள்ள சாக்கு மூட்டையில் தீ வைத்து எரித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில் உள்ளது. 2 குழந்தைகளும், தாய், தகப்பனின்றி அனாதையாக கதறிகொண்டிருக்கிறார்கள்.. கூடா நட்பு கேடாய் தானே முடியும்???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+