லவ்வர் உடன் சண்டை.. சுமத்ரா அவசரப்பட்டுட்டாங்களே! யுவராஜ் எடுத்த விபரீத முடிவு! அலறிய அரியலூர்!
அரியலூர்: அரியலூரில் காதலனுடன் செல்போனில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனம் உடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் காதலனும் காதலியும் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டீன் ஏஜ் பருவம் உணர்ச்சிகள் நிரம்பிய பருவம். வினையான விஷயங்களை கூட எளிதாக முயற்சி செய்து பார்க்கலாமே என நினைக்கும் பருவம். எந்த முடிவாக இருந்தாலும் அவசரப்படுவதும் ஆத்திரப்படுவதும் டீன் ஏஜ் வயதில் சகஜம் தான்.
ஆனால் இரு டீன் ஏஜ் பருவத்தினரின் விபரீதம் இரு குடும்பங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பலூர் அருகே தென்கச்சி பெரும்பான்நத்தம் பகுதியில் சேர்ந்தவர் 22 வயது யுவராஜ். தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பு பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அரியலூர் காதல் சோகம்
இந்த நிலையில் யுவராஜ் நேற்று முன்தினம் திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த யுவராஜின் தந்தை புஷ்பராஜ் அழுது புலம்பியுள்ளார்.
காதல் தோல்வி சோகம்
தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலி இறந்த துக்கத்தில் யுவராஜன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அரியலூர் அருகே சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான சுமத்ராவும் யுவராஜும் காதலித்து வந்திருக்கின்றனர்.
வாக்குவாதம்
தற்போது சுமத்ரா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை விடுதியில் தங்க விருப்பம் இல்லாததால் அதற்கு அருகே ஒரு வாடகை வீட்டில் தனது சக மாணவிகளுடன் தங்கி படித்து வந்திருக்கிறார் சுமத்ரா. இந்த நிலையில் செல்போனில் சுமத்ராவுக்கும் யுவராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இளம் ஜோடி மரணம்
இதனால் மன உளைச்சலில் இருந்த சுமத்ரா சக மாணவிகளுடன் இரவு உணவு அருந்திய பின் தனது அறைக்கு தூங்க சென்றிருக்கிறார். நள்ளிரவில் எழுந்து பார்த்த போது சுமத்ரா வீட்டின் மேற்கூறையில் இருந்த மின்விசிறியில் சுடிதார் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நள்ளிரவில் சுமத்திராவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் செல்போனை எடுக்காததால் சக மாணவிகளுக்கு அழைத்துள்ளார் யுவராஜ்.
காவல்துறை
அப்போது சுமத்ரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து. தனது காதலி இருந்த சோகத்தில் உடனடியாக யுவராஜ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மகன் இறந்த சோகத்தில் யுவராஜின் தந்தை மருத்துவமனையில் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க வைத்தது. இரு தற்கொலை சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications