ஊழியர் மீது நகைக் கடை அதிபர் மனைவிக்கு ஆசை.. 13 ஆண்டாக ஒரே வீட்டில் உல்லாசம்.. கைவிட்டதால் தர்ணா

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: 13 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்றதாக இளைஞர் வீட்டு முன் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 35 வயது இளைஞர். இவர் தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவருடைய வீட்டு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பெண்ணுக்கும் இளைஞரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

திடுக் தகவல்கள்

திடுக் தகவல்கள்


அப்போது அந்த பெண் பல்வேறு திடுக் தகவல்கள் தெரிவித்துள்ளார். அந்த பெண் போலீஸாரிடம் கூறுகையில் ஜெயங்கொண்டத்தில் தனியார் நகைக் கடை அதிபருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது எங்கள் கடையில் பணிபுரிந்த இளைஞருக்கும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவருக்கு தெரியாமல் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளோம். இந்த விவகாரம் கால போக்கில் எனது கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னை விவாகரத்து செய்துவிட்டார். எனது கணவர் கொடுத்த பணம் நகைகளை அந்த இளைஞரிடம் கொடுத்தேன்.

13 ஆண்டுகள்

13 ஆண்டுகள்

இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்வதாக அறிந்தேன். எனவே அந்த இளைஞர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் கொடுத்த ரூ 35 லட்சம் பணம் மற்றும் 70 பவுன் நகைகளை என்னிடம் திருப்பி அளிக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதையடுத்து போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நகைக் கடை அதிபருடனான வாழ்க்கையை நாசம் செய்து கொண்டு அங்கு பணியாற்றிய ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இந்த பெண்ணின் வாழ்க்கை பாழானதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+