"அது" எங்கே.. கறார் மனைவி.. சடலம் பக்கத்திலேயே படுத்து கொண்டு.. பகீர் கணவர்.. மாடு வெட்டுற கத்தியாம்
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் சடலம் பக்கத்தில் அழுது கொண்டேயிருந்தார்
அரியலூர்: குடும்பம் நடத்த பல முறை அழைத்தும், மனைவி செல்லவேயில்லை.. அதுக்காக கொலை வரை இந்த விவகாரம் சென்றுவிடும் என்று அரியலூர் மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
"கோயில்களை கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நாட்டில், கழிவறை வசதியை ஏற்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது ஒருமுறை சொல்லியிருந்தார்.
பிரதமர் ஆனபிறகு 'தூய்மை இந்தியா' திட்டத்தை கொண்டுவந்தார்... இந்த திட்டத்தின்மூலம், ஏராளமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றாலும், தமிழகத்தின் பல கிராமப்புறப் பெண்களின் நிலை பரிதாபமாகவே இருக்கிறது..

விஷப்பூச்சி
ஏற்கனவே, பாலியல் துன்புறுத்தல், கல்வி பாதிப்பு, விஷப் பூச்சிகளால் உயிரிழப்பு, மாதவிலக்கால் ஏற்படும் நோய்த்தொற்று... என எத்தனையோ விஷயங்களில் பெண்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கழிப்பறை வசதி இல்லாததால், ஏற்படும் துன்பங்களும் அதிகம்.. வீடுகளில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் போவது, சில சமயம், இது உயிரையே பறித்துவிடுகிறது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.. நம் தமிழகத்திலேயே இப்படி சம்பவம் நடந்துள்ளது..

ஃபேனில் தூக்கு
கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரம்யா... அவருக்கு வயது 27. எம்எஸ்சி படித்துள்ள இவர், கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.. ஆனால், கார்த்திகேயன் வீட்டில் பாத்ரூம் வசதி இல்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, தன்னுடைய அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார்.. வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக சொன்ன கார்த்திகேயன், கடைசிவரை வேறு வீடு பார்க்கவில்லை.. இது தொடர்பாக இருவருக்கும் தகராறு நடந்து, கடைசியி ரம்யா, ஃபேனில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.

ஆட்டுக்கறி
இதோ மீண்டும் ஒரு சம்பவம் நம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஜாஃபர்.. கறி வெட்டும் தொழிலாளி... மும்பையை சேர்ந்த ரியாஸ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. கணவன்-மனைவி இருவரும் உடையார்பாளையத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.. ஆனால், ஜாபர் வேலை பார்ப்பது ஜெயங்கொண்டத்தில் என்பதால், தினமும், உடையார்பாளையத்தில் இருந்து வேலைக்கு வந்து வந்து போயுள்ளார்..

உறவு + முறிவு
இது சிரமமாக இருப்பதால், ஜெயங்கொண்டத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார் ஜாபர்.. ஆனால், அந்த வீட்டில் பாத்ரூம் இல்லையாம்.. இதனால், ரியாஸ் அதிர்ந்து போனார்.. சில நாட்கள் அட்ஜஸ்ட் செய்து அந்த வீட்டில் தங்கியுள்ளார்.. ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல், ஜெயங்கொண்டத்தில் உள்ள வீட்டில் தங்காமல், உடையார்பாளையம் வீட்டிற்கே வந்து விட்டார். ஜாஃபர் தனது மனைவியை ஜெயங்கொண்டத்திற்கு வந்து தன்னுடன் வசிக்குமாறு பலமுறை அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டாய்லெட்
ஜெயங்கொண்டம் வீட்டில் டாய்லெட்டும் இல்லை, பாத்ரூமும் இல்லை.. முதல்ல கட்டி முடி.. ரெண்டையும் கட்டி முடித்தால் மட்டுமே உன்னுடன் வாழ முடியும்.. அதை கட்டிமுடித்துவிட்டு, என்னை கூப்பிடுங்க.. அப்போது நான் வருகிறேன் என்று ரியாஸ் கறாராக கூறியுள்ளார்.. இதனால் ஜாபர் கடுப்பாகிவிட்டார்.. சம்பவத்தன்று, போதை தலைக்கேறும் அளவுக்கு, தண்ணி அடித்துவிட்டு, ரியாஸிடம் சென்று மறுபடியும் தகராறு செய்துள்ளார்.. குடும்பம் நடத்த வருமாறு கட்டாயப்படுத்தி சண்டை போட்டுள்ளார். அப்போதும் தன் முடிவில் உறுதியாக நின்றார் ரியாஸ்..

சடலம் பக்கத்தில்
இதனால் ஜாபருக்கு ஆத்திரம் அதிகமாகி, மாடு வெட்டும் கத்தியை எடுத்து வைத்து, ரியாஸின் மார்பு, வயிறு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டார்.. இதில் நிலைகுலைந்து போன ரியாஸ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.. போதை தெளிந்த பிறகு, சடலத்தை பார்த்ததுமே அலறி துடித்தார் ஜாபர்.. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அதனால், மனைவியின் சடலத்தின் பக்கத்திலேயே படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.. விஷயத்தை கேள்விப்பட்டு போலீசார் வரும்வரை, மனைவி பக்கத்திலேயே படுத்து, அழுது கொண்டேயிருந்தார் ஜாபர்.. கடைசியில் போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்..
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications