ஏமாளிகள் இல்லை.. பதறிய பாஜக.. நயினாருக்கு போன் போட்ட எடப்பாடி பழனிசாமி
அரியலூர்: தமிழ்நாடு தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் இருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். முக்கியமாக பாஜக கூட்டணி ஆட்சி என்ற கருத்தை தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இது பாஜக வட்டாரத்தை பதற வைத்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரனுக்கு விளக்கம் அளித்துள்ளாராம்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகிவிட்டன. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை மீட்போம். மக்களை காப்போம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக கூட்டணி கிட்டத்தட்ட 8 வருடங்களாக 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 இடைத்தேர்தல்களை சந்தித்துவிட்டது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியுடன் களம் காண தயாராகியுள்ளனர். மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.
தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. நாம் தமிழர், தவெக கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்தவரை, 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார்.
அதேநேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இதுவே அந்தக் கூட்டணிக்குள் முரண் ஏற்பட்டிருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதில் தொடர்ந்து அதிமுக, பாஜக மாறுபட்ட கருத்துகளை கூறுவது விவாதமாக மாறி வருகிறது.
இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து கவலை இல்லை." என கூறினார். இது அரசியல் ரீதியாக மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு நேர் எதிராகவும், கூட்டணி முக்கியமில்லை என்கிற ரீதியிலும் அவர் பேசியிருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இதுதொடர்பாக அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளி இல்லை என தான் பேசியதில் உள் அர்த்தமோ, உள்நோக்கமோ இல்லை என்று எடப்பாடி பழனிசாமி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்ற விமர்சனத்திற்காக எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் அது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி கலந்து பேசி முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்." என்றார்.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications