விஜய் டிவி மகா நடிகை நிகழ்ச்சியில் ஏமாத்திட்டாங்க.. இப்படி எல்லாம் நடக்குது..! நடிகை சொன்ன பகீர் விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது அந்த பாதையில் பயணித்தவர்களுக்கு தான் தெரியும். பல மாதங்கள் ஆடிஷனில் ஓடி ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி கடைசி நேரத்தில் ஏமாற்றமே தனக்கு கிடைத்தது என்று நடிகை சோனி சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சோனி பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பேரரசு வில்லனாக நடித்த சென்ட்ரல் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். ஆனாலும் நடிப்பில் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல ஆடிஷனில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து சமீபத்தில் தனியார் youtube சேனலில் அவர் பேசி இருக்கிறார்.

நடிகை சோனி பேட்டி

அவர் பேசும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடத்தப்பட்ட மகா நடிகை நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் தானும் கலந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு கொண்ட பெண்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அந்த நிகழ்ச்சி அப்போது பார்க்கப்பட்டது. நடிப்பு திறமை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் டிவி அந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் பல பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் அந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டனர்.

Vijay TV Maha Nadigai actress Soni serial actress

மகா நடிகை ஆடிஷனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்களாம். அதிலிருந்து சுமார் 800 பேரை முதலில் தேர்வு செய்திருக்கிறார்கள். பிறகு அதிலிருந்து 200 பேரை ஃபில்டர் செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு பல கட்டங்களாக நடந்த தேர்வுகளில் கடைசியாக 50 பேரை வைத்து போட்டிகள் நடத்தி கடைசியில் 15 பேரை தேர்வு செய்து இருக்கிறார்கள். அந்த 15 பேரில் சோனியும் ஒருவராம்.

மகா நடிகை நிகழ்ச்சி

அது குறித்து அவர் பேசும் போது, நான் இத்தனை கட்டங்களாக நடந்த எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டேன். கடைசியாக 15 போட்டியாளர்களில் ஒருவராக வந்துவிட்டேன். அதற்குப் பிறகு இந்த 15 பேரை வைத்து தான் ப்ரோமோ சூட் நடத்த போகிறோம் நீங்கள் ராதிகா மேடம் முன்பு உங்களுடைய திறமையை காட்டலாம் என்று சொன்னார்கள். நாங்களும் அந்த நாளுக்காக காத்திருந்தோம்.

சன் டிவி ஹீரோவை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. யூடியூப் காதல்.. எளிமையான எங்கேஜ்மென்ட்
ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டிருந்ததை தவிர எங்களுக்கு ப்ரோமோ சூட் செய்ய கூப்பிடவே இல்லை. நாங்கள் கால் பண்ணி கேட்டாலும் எந்த டீடெயிலும் சொல்லவில்லை. பிறகு ப்ரோமோவே வந்துவிட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போ விசாரித்த பிறகுதான் அதில் செலக்ட் ஆனவர்கள் எல்லோருமே சேனல் தரப்பினர்களுக்கும், விஜய் டிவியை சார்ந்த சிலருக்கும் தெரிந்தவர்கள் ரெக்கமெண்ட் மூலமாகத்தான் செலக்ட் ஆகி இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வந்தது.

Vijay TV Maha Nadigai actress Soni serial actress

ஏமாற்றம்

சேனல் தரப்பினர்களுக்கு தெரிந்தவர்களை தான் செலக்ட் செய்ய போகிறார்கள் என்றால் எதற்காக எங்களை இத்தனை முறை அலைக்கழித்தார்கள் என்று எங்களுக்கே தெரியவில்லை என்று அவர் பேசி இருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+