ஆர்.எஸ்.பாரதி அண்ணே.. சேவிங் செட் ரெடியா இருக்கு.. சீண்டிய ஈசிஆர் சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக அரசியல் தவெக Vs திமுக என்று மாறியுள்ளது. தினசரி தவெக, திமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் தவெக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் ஒரு பக்கம் மீசையை எடுத்து கொள்கிறேன் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அவருக்கு சேவிங் செட் வாங்கி வைத்துள்ளதாக தவெக எம்எல்ஏ சரவணன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ ஈசிஆர் சரவணன்,"நம் தலைவருக்கு பேனர் வைப்பது பிடிக்காது. மக்களுக்கு தொந்தரவாக நம் கட்சியினர் பேனர் வைக்கிறார்கள். மக்கள் அழைத்து புகார் சொல்கிறார்கள். பொது மக்கள் தான் நமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் பேனர் வைக்க கூடாது. எந்த குறை வந்தாலும் அது முதலமைச்சர் மீது தான் செல்லும். அதனால் நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ecr-saravanan-slams-rs-bharathi-over-mustache-issue-on-local-body-election

இனி எப்போதும் தவெக ஆட்சி

சாலையோரத்தில் நிறைய கடைகள் உள்ளன. தவெக கட்சியில் இருந்து வருகிறேன் என்று சொல்லி கடைகளில் மாமூல் வசூலித்துள்ளனர். மற்றொருவர் தவெக கட்சியில் இருந்து வருகிறேன் என்று சொல்லி பள்ளியில் பிரச்சனை செய்துள்ளார். அப்படி ஒரு பிழைப்பு நடத்தி கட்சி நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களின் சொந்த பணத்தில் தான் கட்சி பணி செய்கிறோம். நாங்கள் சம்பாதித்த பணத்தில் கூட்டங்கள் நடத்தி நலத்திட்டம் வழங்குகிறோம்.

சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தவெக அமைச்சரவையில் பெண்கள், சிறுபான்மை மக்கள், பட்டியலின மக்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற முடியும். இந்த முதலமைச்சரை போல யாரையும் பார்க்க முடியாது. இந்த 5 வருடங்கள் மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் தவெக ஆட்சி தான் இருக்கும். இந்த தொகுதிக்கு நான் தான் எம்எல்ஏவாக இருப்பேன். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

மீசை எடுக்க சேவிங் செட் ரெடி

இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் தவெக வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலில் தவெக ஒரு மாநகராட்சியில் வென்றால் கூட ஒரு பக்கம் மீசையை எடுத்து கொள்கிறேன் என ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். அண்ணே ஆர்.எஸ்.பாரதி அண்ணே சேவிங் பிளேடு வாங்கி ரெடியா வைச்சுக்கோங்க. ஆலந்தூரில் பேசியபோதே நாங்களும் உங்களுக்காக வாங்கி வைத்துள்ளோம். அனைத்து மாநகராட்சிகளிலும் தவெக வெற்றி பெறும். அதன் பிறகு சேவிங் செட்டை கையில் கொடுப்போம். மீசையை எடுக்க தான் போகிறீர்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+