செல்வமகள் சேமிப்பு திட்டம்: வட்டிப் பலனை இழக்காமல் இருக்க பெற்றோர் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது, இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசால் 8.2 சதவீத வட்டியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அனைத்து பள்ளிகளிலும் நேரடியாகச் சிறப்பு முகாம்களை நடத்த தபால் துறை தற்போது புதிய சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதை பற்றின தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசால் 8.2 சதவீத வட்டியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த சிறு சேமிப்புத் திட்டம் "சுகன்யா சம்ரித்தி யோஜனா" ஆகும். இதனை தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று பரவலாக அழைக்கிறோம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்
இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்கு உதவுவதால், கோடிக்கணக்கான பெற்றோர் இதில் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர். இருந்தாலும் பெற்றோர் தங்களுக்கு தெரியாமல் செய்யும் சில சின்ன சின்ன தவறுகளால் முதிர்வு காலத்தில் கிடைக்க வேண்டிய வட்டி பலனில் ஒரு பகுதியை இழக்க நேரிடலாம்.
கூட்டு வட்டியின் முழு பலனையும் பெற்று, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பெற்றோர் சில முக்கியமான தவறுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் பலன்கள்
முக்கியமாக இந்த திட்டத்தில் வட்டியானது ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கும் அந்த மாதத்தின் கடைசி நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் கணக்கில் இருக்கும் மிகக் குறைந்த இருப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதனால் பெற்றோர் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன்பாகவே பணத்தை செலுத்த வேண்டும். 5ம் தேதிக்கு பிறகு செலுத்தப்படும் தொகைக்கு அந்த மாதத்திற்கான வட்டி கிடைக்காது.
அதுமட்டுமல்ல, பெண் குழந்தை பிறந்ததுமே கணக்கை தொடங்காமல் தாமதிப்பது, ஆண்டுக்கு குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயைக் கூட செலுத்தாமல் கணக்கை முடக்கவிடுவது, அவசர தேவையின்றி முன்கூட்டியே பணத்தை எடுப்பது, தபால் நிலையத்திலோ வங்கியிலோ தங்களின் முகவரி, செல்போன் நம்பர்களை புதுப்பிக்காமல் விடுவது போன்ற தவறுகளை பெற்றோர் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது.
மேற்கண்ட தவறுகளை சரிசெய்து முறையாக முதலீடு செய்வதன் மூலம் பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான சேமிப்பை வலுப்படுத்த முடியும்.
முதலீட்டு தேதியில் பெற்றோர் செய்யும் தவறு
இப்படிப்பட்ட சூழலில், இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இன்னும் விடுபட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்க தபால் துறை இப்போது ஒரு புதிய சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. .. அதாவது பெற்றோர்கள் தபால் நிலையங்களுக்கு அலைவதை தவிர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து பள்ளிகளிலேயே நேரடியாக சிறப்பு முகாம்களை நடத்த தபால் துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.
பள்ளிகளிலேயே நேரடி சிறப்பு முகாம்கள்
நடப்பு நிதியாண்டுக்கான பள்ளிக் கல்வித் திட்டம் தற்போது தொடங்கியுள்ளதை முன்னிட்டு, வரும் மாதங்களில் பள்ளிகளில் இந்த முகாம்களை நடத்தி மாணவிகளை சேர்க்க இருக்கிறார்களாம்.. இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கும்போது பெண் குழந்தை இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதும், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விதிகளாகும்.
செல்வமகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3.92 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.2.59 லட்சம் கோடிக்கும் மேல் சேமிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில் தமிழ்நாடு மிக முக்கிய முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 38 லட்சத்து 90 ஆயிரத்து 666 கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.31,211 கோடியே 29 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.. இதில் சென்னையின் பங்களிப்பு மட்டுமே 11.3 லட்சம் கணக்குகளாகும்.
உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் அகில இந்திய அளவில் முன்னிலை வகிப்பதாக தபால் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தபால் துறையின் இந்த பள்ளி முகாம் முயற்சி, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications