ஓஓ.. இது எப்ப.. ஸ்டாலினை பார்த்தாலே மோடி ஒன்னு சொல்லுவாராமே.. என்ன தெரியுமா.. சீக்ரெட் உடைத்த சீனியர்
துரைமுருகன் விருதுநகர் விழாவில் கருணாநிதியை புகழ்ந்து பேசினார்
சென்னை: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை பார்க்கிறபோதெல்லாம் ஒன்னு சொல்லுவாராம்.. அது என்ன என்று, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் திமுகவின் முப்பெரும் விழா நேற்றுமுன்தினம் நடந்தது.. இந்த விழாவில், தமிழக முதல்வர் கலந்து கொண்டதோடு தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

டெல்லிவாசம்
துரைமுருகன் பேசினாலே சுவாரஸ்யங்களும், ஜோக்குகளும் தெறித்து வந்து விழுவது வழக்கம்.. அந்தவகையில், முப்பெரும் விழாவிலும் துரைமுருகன் பேசிய பேச்சு, திமுகவினரை பெரிதும் கவர்ந்திழுத்து வருகிறது.. அதன் சுருக்கம் இதுதான்: ''நான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக நினைக்கக் கூடாது, அண்ணா ராஜ்ய சபாவிற்கு போன பிறகுதான் அவரது அறிவாற்றலை கண்டு அத்தனை பேரும் வாய் பிளந்து நின்றார்கள். நீண்ட காலம் அவர் டெல்லி வாசத்தில் இல்லை. அதற்குப் பிறகு கலைஞர் வந்தார். அவர் முதல்வராகி, முதன்முதலாக டெல்லிக்கு போனபோது, அவரை எல்லாரும் ரொம்ப சாதாரணமாக நினைத்தார்கள்...

அப்பாயிண்ட்மென்ட்
அப்போது, முதன்முதலில் அவர் மொரார்ஜி தேசாயை பார்க்க போனார்... 5 மணிக்கு அவருக்கு அப்பாயிண்மென்ட் தரப்பட்டிருந்தது.. ஆனால், டிராபிக் ஜாமில் 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர்.... முதல் முறையாக ஒரு சீப் மினிஸ்டர் வருகிறார் என்றெல்லாம் மொரார்ஜி தேசாய் பார்க்கவில்லை.. "வாழ்த்துக்கள் எப்படி இருக்கீங்க? தமிழ்நாட்டுக்கும், இந்த நாட்டுக்கும் உங்கள் சேவை தேவை" என்றெல்லாம் சொல்லவில்லை.. கலைஞருக்கு ஒரே ஒரு வாழ்த்து கூட மொரார்ஜி தேசாய் சொல்லவில்லை.

நெருப்பு + நாற்காலி
கலைஞர் உள்ளே நுழைந்ததும் சொன்னாராம், "நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா, உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதற்கு?" என்று நெருப்பை கொட்டினாராம்.. அந்த இடத்தில் தன் மனநிலை பற்றி கலைஞர் சொன்னார்.. "அந்த நாற்காலியில் உட்காரக்கூட எனக்கு மனசு இல்லை... இருந்தாலும் நெருப்பின் மேல் உட்காருவது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்" என்று என்னிடம் சொன்னார்.

நெருப்பு துண்டு
இதற்கு பிறகு, மொரார்ஜி தேசாய் அடுத்த கேள்வி கேட்டாராம்.. "எங்கே வந்தீங்க?" என்றாராம்.. "நிதி கேட்பதற்காக வந்திருக்கிறேன்... நீங்கள்தான் நிதி அமைச்சர்" என்று கலைஞர் சொன்னாராம்... அதற்கு மொரார்ஜி தேசாய், "நிதி எங்கே இங்கே கொட்டியா கிடக்கிறது? என் வீட்டு தோட்டத்தில் என்ன, பணம் காய்க்கிற மரமா இருக்கிறது உனக்கு அறுத்து கொடுப்பதற்கு" என்று மறுபடியும் நெருப்பை கொட்டி உள்ளார்.

ஓ.. தோட்டம்
அதுவரையில் பொறுமைகாத்த கலைஞர் சொன்னாராம், "பணம் காய்க்கும் மரம் என்று இந்த உலகத்திலேயே கிடையாதே.. பிறகு உம்முடைய தோட்டத்தில் மட்டும் எப்படி ஐயா இருக்கும்?" என்று கேட்டபோதுதான், ஓ.. இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாராம் மொரார்ஜி. இப்படி முதன்முறையிலேயே புறக்கணிக்கப்பட்ட தலைவர், பிறகு பிரதமர்களை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு யார் என்று கேட்டால் அது கலைஞரால்தான் முடியும் என்று இந்தியாவே ஒத்துக் கொண்டு போனது.

திமுக & பாஜக
ஆனால் ஸ்டாலின் எப்படி தெரியுமா? இன்று கட்சியின் தலைவராகி, முதலமைச்சரானதும் இன்றும் அதிகமாக அவருடைய கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் ஸ்டாலின் தான் என்பதை அகில இந்தியா ஒத்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் வேற்றுமை உண்டு பாஜகவுக்கும் நமக்கும்... ஆனால் பிரதமர் மோடி ஸ்டாலினை பார்க்கிறபோதெல்லாம் ஒன்று சொல்வார், "கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின்... உன்னை எனக்கு பிடிக்கிறது... நீ வந்தால் என் வீட்டிலே தங்கு.. உன்னை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்கிற அளவுக்கு இவருடைய கண்ணியம் பண்பாடு தலைதூக்கி நிற்கிறது'' என்றார்.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications