காட்டு பகுதியில் 3 மாணவிகள்.. ஸ்கூல் பிள்ளைங்க.. கையில் பீர் பாட்டில்.. சியர்ஸ் வேறு.. ஷாக் வீடியோ!
பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ அதிர்ச்சியை தந்துவருகிறது
Recommended Video
அரியலூர்: காட்டுப்பகுதியில் 3 மாணவிகள்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்... அவர்கள் கையில் பீர்பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்... சியர்ஸ் சொல்லி எல்லோருமே தண்ணி அடிக்கிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு வீடியோ வெளியாகி உள்ளது... அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் இவர்கள்.. மொத்தம் 4 பேர்.. நால்வருமே மாணவிகள்.
ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர்.. ஒரு மாணவி வீடியோ எடுக்க.. மற்ற 3 பெண்களும் தண்ணி அடிக்கிறார்கள். அது ஒரு காட்டுப்பகுதி போல உள்ளது.. பீர் பாட்டிலுடன் ஸ்நாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவைகளும் தயாராக கொண்டு வந்துள்ளனர்... பாட்டிலை திறந்து 3 பேருமே டம்பளரில் ஊற்றி குடிக்கிறார்கள்.

வேற லெவலு
"பயமா இருக்குடி.. யாராவது வந்துட போறாங்க..".. என்னடி இப்படி குடிக்கிறீங்க?", பாட்டிலை தூக்கி போடுங்கடி... எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு" இப்படி அந்த வீடியோவில் பேச்சுக்கள் பதிந்துள்ளன.. எந்த குற்ற உணர்வும் இந்த பெண்களிடம் தெரியவில்லை.. யார் வீட்டு பிள்ளைகளோ, என்ன பாடுபட்டு இவர்களை வீட்டில் படிக்க வைக்கிறார்களோ.. அதுவும் தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்தால் அவர்கள் வயிறு எப்படி துடிக்கும் என்றும் நம்மால் யோசிக்க முடியவில்லை.

கள்ள சாராயம்
முன்பெல்லாம் மூலைக்கு மூலை தனியார் மதுபான கடைகள் இயங்கி வந்தன... அதனால் ஏதாவது ஒரு சில கிராமப்புறத்தில் அதுவும் காட்டுப்பகுதியில் மட்டும்தான் கள்ளச்சாராயம் விற்பார்கள்.. இது ஓரளவு குடிமகன்களின் எண்ணிக்கையை குறைத்தது.. சாராயக்கடையில் மதுவை வாங்கி கொண்டு, அதை யாருக்கும் தெரியாமல் குடித்து முடிப்பதற்கே அன்று ஆண்கள் நடுங்கி போய்விடுவார்கள்.

அம்பலம்
ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்! மதுக்கடைகள் அரசு ஏற்று நடத்துகிறது... மறைவாக நடத்தப்பட்டவை அம்பலமாக நடக்கிறது.. பகிரங்கமாக குடிக்கிறார்கள்... இதில் சில இளம்பெண்கள் சிக்கி கொண்டுள்ளது வேதனையை தருகிறது. தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னாபின்னமாகி விட்டன. பல உயிர்கள் பறிபோனாலும் மதுக்கடைகளை மூட முடியவில்லை. மதுவினால் பல குற்றங்கள் அதிகரித்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.

வேதனை வீடியோ
இதற்காக போராட்டங்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்தான் அதிகமாகி வருகிறது.இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா? அறியாமை என்று சொல்வதா? இவர்களிடம் கண்டிப்பு காட்டாமல், தொடர் கண்காணிப்பும், அரவணைப்பும் இருந்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது... ஆனால், மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications