அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கோணம்.. 2020ல் வளர்ப்பு தாய்க்கு எதிராக புகார் கொடுத்தாரா அரியலூர் மாணவி? போலீஸ் விசாரணை

Google Oneindia Tamil News

அரியலூர்: தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி 2020ல் தனது வளர்ப்பு தாய்க்கு எதிராக புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த புதிய கோணத்தில் போலீசார் வழக்கை விசாரித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தஞ்சாவூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஹாஸ்டல் வார்டன் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லியும், திருட்டு பட்டம் கட்டியும் ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சகாய மேரி கைது செய்யப்பட்டுவிட்டார். மேஜிஸ்டிரேட்டிடம் மாணவி கொடுத்த வாக்குமூலத்திலும் இதே புகார் வைக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர்-2வது கணவர் போலீசில் புகார் பாஜகவின் சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர்-2வது கணவர் போலீசில் புகார்

பாஜக

பாஜக

ஆனால் அந்த மாணவியை மத மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது. மாணவியின் பெற்றோரும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சுயமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதோடு அந்த மாணவியின் கடைசி வீடியோவை எடுத்த நபரும் நேற்று தஞ்சை போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்து, தனது போனை அவர்களிடம் ஒப்படைத்தார்.

புதிய கோணம்

புதிய கோணம்

இந்த நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் தற்போது புதிய கோணம் ஒன்றில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி 2020ல் தனது வளர்ப்பு தாய்க்கு எதிராக புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஜூலை 18ம் தேதி அரியலூரை சேர்ந்த அந்த மாணவி தனது வளர்ப்பு தாய்க்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார்.

 உதவி எண்ணில் புகார்

உதவி எண்ணில் புகார்

1098 என்ற உதவி எண்ணுக்கு போன் செய்து தனது வளர்ப்பு தாய் பற்றி புகார் அளித்துள்ளார். தனது வளர்ப்பு தாய் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவரை பார்த்தால் தனக்கு அச்சமாக இருக்கிறது என்றும் அந்த மாணவி புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போதே குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணையும் நடத்தி உள்ளனர். இது தொடர்பான விசாரணை ரெக்கார்டுகள் போலீஸ் வசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சோதனையை போலீசார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அரியலூர்

அரியலூர்

அரியலூர் மாணவியின் தாய் முன்பே இறந்துவிட்டதால் அவரின் தந்தை வேறு ஒரு பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த வளர்ப்பு தாய்தான் அரியலூர் மாணவியை வளர்த்து வந்தது. இந்த நிலையில்தான் வளர்ப்பு தாயின் கொடுமைக்கு எதிராக அந்த மாணவி புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த மாணவிதான் இந்த மாணவியா என்று அடையாளத்தை உறுதி செய்யும் இறுதிக்கட்ட விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.. அதாவது மாணவியின் தற்கொலைக்கு வேறு விதமான அழுத்தங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணைகள் நடந்து வருகின்றன.

English summary
Tanjore girl student issue: Tamilnadu Police investigates in a new angle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X