இப்படியெல்லாம் கூட நடக்குமா? கர்நாடகாவில் 100 நாள் வேலையில் "முக்காடு" பெண்கள்.. லட்சக்கணக்கில் லாபம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம், மிகுந்த அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டுபண்ணி வருகிறது. மத்திய அரசின் 100 நாள் திட்டத்திலும் ஒரு மோசடி நடந்துள்ளது.. அரசாங்க திட்டத்திலேயே இப்படியொரு மோசடியை செய்தவர்கள் யார் என்பதுதான் அடுத்த அதிர்ச்சியாக உள்ளது. கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தில் அப்படி என்ன நடந்தது? இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் போட்டோ என்ன?
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை பொதுமக்கள் சுருக்கமாக, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைத்து வருகிறார்கள்..

வேலை வாய்ப்புகள் - சமமான ஊதியம்
இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. . இதன் மூலம் கிராமப்புறத்து மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதிசெய்யப்படுகிறது. இத்திட்டம் மூலம் இந்தியா முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து கூடுதலாக ஊதியம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருறது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது
இதற்கும் விரைவில் தீர்வை மத்திய அரசு எடுக்கப்படும் என தெரிகிறது. காரணம், சமீபத்தில் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பதை சுட்டிக்காட்டியிருந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சீரான ஊதிய விகிதத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது.
பெண்களுக்கு பலன் தரும் திட்டம்
அதுமட்டுமல்லாமல், விலைவாசி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் ஊதியங்களை திருத்த வேண்டும் என்றும், கிராமப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருந்தது.. அத்துடன், இது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுசம்பந்தமான நல்ல செய்தி விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. அதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, MGNREGA திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான முயற்சிகளை, கடந்த மார்ச் மாதம் முன்னெடுத்திருந்தது.. உள்ளூரிலுள்ள தொழிலாளர்கள், பெரிய நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுப்பதற்காகவே இந்த முயற்சி கொண்டுவரப்பட்டது.
அதன்படி, வேலையின்றி தவிப்போருக்கு உதவுவதற்காகவே, அனைத்து கிராம மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளிலும் கோரிக்கை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக யாத்கீர் பஞ்சாயத்தில் கூறப்பட்டிருந்தது.
போட்டோவை பார்த்து அதிர்ச்சி
இப்படிப்பட்ட சூழலில், சில ஆண்கள் பெண்களை போலவே நடித்து ஏமாற்றியிருக்கிறார்கள்.. அதாவது, சில ஆண்கள், பெண்களை போலவே சேலை அணிந்து, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நடித்து, அரசாங்கத் திட்டத்தையே ஏமாற்றி ரூ.3 லட்சம் மதிப்புள்ள சலுகைகளையும் பெற்றிருக்கிறார்கள்.
இது தொடர்பான போட்டோக்கள் NMMS எனப்படும் தேசிய மொபைல் கண்காணிப்பு சேவையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.. அதாவது, பெண் தொழிலாளர்கள் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்பதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்த மோசடி
அரசாங்கத் திட்டத்தை ஏமாற்றியது மட்டுமல்லாமல், ஏராளமான பெண்களும் இதனால் வேலையின்றி தவித்துள்ளனர்.. இதற்கு பிறகே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. வெளியாட்களை கொண்டுவந்து, பணியில் அமர்த்தி கணக்கு காட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அவுட்சோர்சிங் தொழிலாளர்களை யாருமே இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என்று மல்ஹார் கிராமத்தின் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி சென்னபசவா என்பவர் விளக்கம் தந்துள்ளார்.
அவுட்சோர்ஸ் ஊழியர்
இதுகுறித்து அவர் சொல்லும்போது, "இந்த வழக்கில் எனக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. ஏற்கனவே ஒரு அவுட்சோர்ஸ் ஊழியர் இப்படி செய்தபோது, அது என்னுடைய கவனத்துக்கு வந்தது.. உடனே அந்த ஊழியரை நான் சஸ்பெண்ட் செய்துவிட்டேன். இப்போது இந்த கிராமத்தில் MGNREGA பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன. இதுவரை நாங்கள் 2,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவரும் 100 நாள் வேலை திட்டத்திலும் மோசடியா? அதிலும் பெண்களை போலவே, சேலையணிந்து முக்காடு போட்டு நடித்து, அரசாங்கத்தையே ஏமாற்றுவதா? என்ற அதிருப்தி கர்நாடகாவில் வெடித்துள்ளது.
போலியான ஆட்கள் வருகைப்பதிவு
தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் இப்படியான புகார்கள் வெடித்து வருகிறது.. சில இடங்களில் போலியான ஆட்கள் மூலம் வருகைப் பதிவுகளை ஏற்படுத்தி மொத்தப் பணத்தையும் எடுத்து கொள்கிறார்களாம்.
அதனால்தான், செயலிகள் மூலம் பயனாளிகளின் தினசரி வருகையானது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பயனாளிகள் தங்கள் செயல்பாடுகளை காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், அவர்கள் பற்றிய விவரங்களை மதியம் 2 மணிக்கும் செயலி வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயனாளிகளின் வருகைப் பதிவேடுகளையும் அவர்களின் ஆதார் எண், போட்டோவுடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. இப்படியெல்லாம் கடிவாளம் போட்டாலும்கூட, சில அதிகாரிகளின் எல்லைமீறல்கள் தொடர்கிறதாம்.. இதற்கெல்லாம் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும் 100 நாள் தொழிலாளர்களின் புலம்பல்கள் அதிகரித்து வருவதும் நினைவுகூரத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications